Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“204 ரன்கள் பார்ட்னர்ஷிப்”.. வள்ளல்களாக மாறிய இந்திய பவுலர்கள்.. கடின இலக்கால் திகைத்து போன இந்தியா!

பார்ல்: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.

இரு அணிகளும் மோதி வரும் முதல் ஒருநாள் போட்டி பார்ல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.

டாஸில் வெற்றி பெற்ற போதும், அந்த அணியால் நல்ல தொடக்கத்தை பெற முடியவில்லை. ஜஸ்பிரித் பும்ரா அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

ஜஸ்பிரித் பும்ரா வீசிய 5வது ஓவரிலேயே அந்த அணியின் தொடக்க வீரர் ஜென்னிமேன் மாலன் 6 ரன்களுக்கு நடையை கட்டினார். இதன் பின்னர் வந்த குயிண்டன் டிகாக் அஸ்வினின் சுழலில் சிக்கி 27 ரன்களுக்கு நடையை கட்டினார். அச்சுறுத்தல் தரக்கூடிய வீரராக கருதப்பட்ட யெய்டன் மர்கரம், வெங்கடேஷ் ஐயர் வீசிய க்ளாசிக் த்ரோவால் ரன் அவுட்டாகி 4 ரன்களுக்கு அவுட்டானார்.

அதிக பார்ட்னர்ஷிப்

அதிக பார்ட்னர்ஷிப்

63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென்னாப்பிரிக்க அணி குறைந்த ஸ்கோருக்குள் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பே தராமல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் பவுமா - வென் டர் டுசன் ஜோடி. தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, இடை இடையே அதிரடி காட்டினர். இதனால் இந்திய பவுலர்களால் அவர்களை கணிக்க முடியவில்லை.

கடின இலக்கு

கடின இலக்கு

இதனால் இரு பேட்ஸ்மேன்களுமே சதம் அடித்து 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இந்திய அணியின் புதிய கேப்டன் கே.எல்.ராகுல் தொடர்ந்து பவுலர்களை மாற்றி அமைத்த போதும், அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு மட்டும் ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது யாருக்கும் புரியாமல் இருந்தது. இதன் விளைவாக முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 297 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெற்றி வாய்ப்பு உள்ளதா?

வெற்றி வாய்ப்பு உள்ளதா?

சிறப்பாக விளையாடிய வாண் டர் டுசன் ரன்களும், பவுமா ரன்களும் எடுத்தனர். போலாண்ட் பார்க் மைதானத்தில் 250 ரன்களுக்கு மேல் எந்த அணியும் இதுவரை விரட்டியது இல்லை. 2வது இன்னிங்ஸில் பேட்டிங் கடினமானதாக இருக்கும் எனத் தெரிகிறது. ஒருவேளை இந்தியா அடித்துவிட்டால் புதிய வரலாறு படைக்கும்.

Story first published: Wednesday, January 19, 2022, 20:56 [IST]
Other articles published on Jan 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+