For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA : உலகக்கோப்பை கேப்டனை அணியில் இருந்தே நீக்கிய தென்னாப்பிரிக்கா.. இந்திய அணிக்கு எதிராக புதிய கேப்டன்

கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணியின் வழக்கமான கேப்டன் கேப்டன் டெம்பா பவுமா ஒருநாள் அணி மற்றும் டி20 அணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதற்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பின் போது தான் டெம்பா பவுமா நீக்கப்பட்டு இருக்கிறார்.

2023 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை அரை இறுதி வரை அழைத்துச் சென்றார் டெம்பா பவுமா. ஆனால், அவரது தனிப்பட்ட பேட்டிங் குறித்து விமர்சனம் இருந்தது. அவர் உலகக்கோப்பை தொடரில் சரியாக ரன் குவிக்கவில்லை.

INDIA vs SOUTH AFRICA : Captain Temba Bavuma dropped from ODI and T20 teams

இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டு, டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பெற்றுள்ளார். டெஸ்ட் அணியின் கேப்டனாக அவர் தொடர்வார் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அமைப்பு அறிவித்துள்ளது. அவரது ஒருநாள் மற்றும் டி20 அணி நீக்கம் குறித்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு புதிய கேப்டனாக எய்டன் மார்கிரம் நியமிக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடரில் சில போட்டிகளின் போது பவுமா உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த போது மார்கிரம் தென்னாப்பிரிக்கா கேப்டனாக அணியை வழிநடத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதனால், அவரிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு எதிராக பங்கேற்க உள்ள தென்னாப்பிரிக்கா டி20 அணி :
எய்டன் மார்கிரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நாண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனோவான் பெரேரா, ரீஸா ஹென்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், டேவிட் மில்லர், கேசவ் மகராஜ், ஹென்ரிச் கிளாசன், லுங்கி என்கிடி, அண்டில் பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்

இந்திய அணிக்கு எதிராக பங்கேற்க உள்ள தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி அணி :

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், நாண்ட்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, ரீஸா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், மிஹ்லலி மபோங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென், கைல் வெர்ரைன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்.

இந்திய அணிக்கு எதிராக பங்கேற்க உள்ள தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி :
டெம்பா பாவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ராம், வியான் முல்டர், லுங்கி என்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரின்னே.

Story first published: Monday, December 4, 2023, 18:26 [IST]
Other articles published on Dec 4, 2023
English summary
INDIA vs SOUTH AFRICA : Captain Temba Bavuma dropped from ODI and T20 teams
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+