Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நான் ஓகே.. ஆனால் அவர் விளையாடல” 3வது டெஸ்டில் முக்கிய வீரர் இல்லை.. கோலியின் அறிவிப்பால் ஷாக்!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் ப்ளேயிங் 11 குறித்து கேப்டன் விராட் கோலி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Team India's Test record in Cape Town | IND vs SA 3rd Test | OneIndia Tamil

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 - 1 என சமநிலையில் உள்ளது.

வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் உள்ள நியூலாந்து மைதானத்தில் தொடங்கவுள்ளது.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

தென்னாப்பிரிக்க அணி தனது அதிகப்படியான டெஸ்ட் வெற்றிகளை கேப்டவுன் மைதானத்தில் தான் பெற்றுள்ளது. இதே போல இங்கு இந்திய அணி ஒரு வெற்றியை கூட பெற்றதில்லை என்பதால் மிகவும் கவனத்துடன் ப்ளேயிங் 11- ஐ தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் ப்ளேயிங் 11ல் இருக்கப்போகும் மாற்றம் குறித்து கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

விராட் கோலி அறிவிப்பு

விராட் கோலி அறிவிப்பு

கடந்த 2வது டெஸ்ட் போட்டியில் தோள்பட்டை வலி காரணமாக வெளியேறியிருந்த விராட் கோலி, முழு உடற்தகுதி பெற்றிவிட்டதாகவும், 3வது டெஸ்டில் நிச்சயம் விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் கோலி ஹனுமா விஹாரியின் இடத்திற்கு மாற்று வீரராக களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. ரகானே மற்றும் புஜாரா மீண்டும் வாய்ப்பு பெறுகின்றனர்.

ஒரு வீரர் விலகல்

ஒரு வீரர் விலகல்

ஆனால் பவுலிங்கில் நட்சத்திர வீரர் முகமது சிராஜ் பங்கேற்க மாட்டார் என கோலி அறிவித்துவிட்டார். இதுகுறித்து பேசிய அவர், காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள முகமது சிராஜ் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை. முக்கியமான போட்டியில் 100% உடற்தகுதி இல்லாத ஒரு பந்துவீச்சாளரை களமிறக்கி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எனவே அவர் இல்லை என கூறியுள்ளார்.

மாற்று வீரர்

மாற்று வீரர்

சிராஜுக்கு மாற்றாக இந்திய அணியில் உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா என 2 சீனியர் வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இஷாந்த் சர்மா நன்கு பவுன்சர் போடக்கூடியவர், உமேஷ் யாதவ் நன்கு வேகமாக வீசக்கூடியவர். ஆனால் கேப்டவுன் மைதானத்தில் அதிகப்படியான வேகம் மற்றும் அதிகப்படியான பவுன்சர் பந்துகள் வருவதற்கு உகந்ததாகும். எனவே இருவரில் யாரை சேர்ப்பார்கள் என்ற குழப்பம் நீடிக்கிறது.

கோலியின் பதில்

கோலியின் பதில்

இதுகுறித்து பேசியுள்ள கோலி, கேப்டனான நானும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் அமர்ந்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளோம். இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்கள் என்பதால் யாரை விடுவது, யாரை தேர்ந்தெடுப்பது என்பது குழப்பமாக உள்ளது என கூறியுள்ளார்.

Story first published: Monday, January 10, 2022, 20:27 [IST]
Other articles published on Jan 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+