Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விளையாடுங்க.. இல்லாட்டி கேன்சல் பண்ணுங்க.. சஹல் மாஸ்க்கோட கிளம்பிட்டாரு!

தர்மசாலா: தர்மசாலாவில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிக்காக முகத்தில் மாஸ்க் அணிந்து கிளம்பி விட்டார் இந்திய பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல்.

Recommended Video

Ind vs SA 1st ODI | SA With India Tour After Corona Risk | Chahal wears face mask

இப்போட்டி நடைபெறுமா என்பது ஒரு பக்கம் சந்தேகமாகவே உள்ளது. காரணம் அங்கு மழை பெய்து வருவதாலும், கொரோனா பரவல் பீதி காரணமாகவும் போட்டி நடக்குமா என்று தெரியவில்லை.

ஆனால் இந்திய வீரர் சஹல் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி தர்மசாலா போட்டிக்கு தான் தயாராகி விட்டதாக உணர்த்தி ஒரு போட்டோ போட்டுள்ளார்.

கொரோனா விழிப்புணர்வுடன் அணி

கொரோனா விழிப்புணர்வுடன் அணி

இந்தப் போட்டியை எப்படி எதிர்கொள்வது என்பதை விட கொரோனா குறித்த விழிப்புணர்வில் இந்திய அணி உள்ளது. கேப்டன் விராட் கோலி முதல் அனைத்து வீரர்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றத் தொடங்கியுள்ளனராம். இந்த நிலையில்தான் போட்டியில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் கிளம்பிய சஹல், ஒரு போட்டோவைப் போட்டுள்ளார்.

மாஸ்க்கோடு கிளம்பினார் சஹல்

அந்தப் போட்டியில் சஹல் முகமூடியுடன் காணப்படுகிறார். தான் தர்மசாலாவுக்குக் கிளம்பி விட்டதாக கூறியுள்ள அவர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் மாஸ்க் அணிந்து பக்காவாக இருப்பதையும் அவர் புகைப்படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். வழக்கமாக கிரிக்கெட் வீரர்கள் கார்டு போட்டுக் கொண்டுதான் ஆடுவார்கள். இப்போது முகமூடிக்குத் தாவியுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா கை குலுக்காது

தென்னாப்பிரிக்கா கை குலுக்காது

இதற்கிடையே, போட்டியின்போதும் போட்டி முடிந்த பிறகும் யாருக்கும் கை குலுக்குவதில்லை என்ற முடிவில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் உள்ளனர். இதனால் தேவையில்லாத பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பெளச்சர் கூறியுள்ளார். இந்தத் தொடரில் மருத்துவர்களின் அறிவுரைகளை தாங்கள் கடைப்பிடிக்கவுள்ளதாகவும் பெளச்சர் தெரிவித்துள்ளார்.

உரிய அறிவுறுத்தல் இருக்குமா?

உரிய அறிவுறுத்தல் இருக்குமா?

அதேசமயம், இந்திய அணி நிர்வாகம் இதுபோல எந்த அறிவுறுத்தலையும் இந்திய வீரர்களுக்குக் கொடுத்துள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் சஹல் போட்டோவைப் பார்த்தால் நிச்சயம் இந்திய அணியும் ஏகப்பட்ட உத்தரவுகளைப் பிறப்பித்திருக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. போட்டியினபோதும் இதுபோல முகமூடி அணிந்து ஆடுவார்களா என்றும் தெரியவில்லை.

Story first published: Wednesday, March 11, 2020, 13:05 [IST]
Other articles published on Mar 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+