Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 டி20, 5 ஒன்டே, 4 டெஸ்ட்.. எங்கே, எப்போது? இந்தியா-தென் ஆப்பிரிக்க தொடர் முழு கால அட்டவணை

டெல்லி: இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 டி20, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் ஆட உள்ளது.

இத்தொடருக்கு, மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா தொடர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அக். 2ம் தேதியான இன்று, டி20 போட்டியுடன் தொடர் ஆரம்பிக்கிறது.

India vs South Africa compleate schedule

அக்டோபர் 2ம்தேதி இன்று, முதல் டி20 போட்டி, தர்மசாலாவில் நடக்கிறது. அக்.5ம் தேதி, 2வது டி20 ஆட்டம், ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது. அக். 8ம் தேதி, 3வது டி20 போட்டி, கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த மூன்று டி20 போட்டிகளுமே, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகின்றன.

அக்.11ம் தேதி, முதல் ஒருநாள் போட்டி (ஞாயிறு), கான்பூரில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. அக். 14ம் தேதி, இரண்டாவது ஒருநாள் போட்டி (புதன்) இந்தூரில் பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. அக்.18ம் தேதி, 3வது ஒருநாள் போட்டி (ஞாயிறு) ராஜ்கோட்டில் பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. அக். 22ம் தேதி 4வது ஒருநாள் போட்டி (வியாழன்) சென்னையில் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. அக். 25- 5வது ஒருநாள் போட்டி (ஞாயிறு) மும்பையில் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

நவம்பர் 5 முதல் 9ம் தேதிவரை முதல் டெஸ்ட் மொகாலியில் நடக்கிறது. நவ.14 முதல் 18ம் தேதி வரையில், 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. நவ. 25 முதல் 29 வரை, 3வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. டிசம்பர் 3 முதல் 7ம் தேதிவரை 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

Story first published: Friday, October 2, 2015, 14:24 [IST]
Other articles published on Oct 2, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+