Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த சிஎஸ்கே வீரரை ஏன் எடுக்கல.. கொஞ்சம் கூட தேர்வுக்குழுவின் முடிவு புரியல..முன்னாள் வீரர்கள் சாடல்

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியை கட்டமைக்கும் பணியில் ராகுல் டிராவிட் உள்ளிட்ட இந்திய அணி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏற்கனவே அணியில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இல்லாத நிலையில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்க்கு ஒரு தேவை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஏற்ற வீரராக சிஎஸ்கே வின் நட்சத்திர வீரர் சிவம் துபே இருப்பார் என்று பலரும் நம்பினர்.

India vs south africa - EX cricketers asks Why Shivam dube is not selected in team india

இதற்கு தகுந்தார் போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் சிவம் துபே இந்திய அணிகள் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் சிவம் துபேக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ரசிகர்களையும் கிரிக்கெட் வல்லுநர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா சில சமயம் தேர்வு குழு எடுக்கும் முடிவு ஆச்சரியப்பட வைக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் சிவம் துபே சேர்க்கப்பட்டார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 17 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து இருக்கிறார்கள்.

அதில் சிவம் துபே இல்லை இப்படி இருக்கும் போது சிவம் துபே போய்விடும் நீங்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து தேர்வு குழுவினர் எப்படி விளக்குவார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள நட்சத்திர வீரர் ஜாகீர் கான் ஆஸ்திரேலியாவை பாருங்கள் அவர்கள் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரை எவ்வாறு அணுகினார்கள் என்று உங்களுக்கு தெரியும்.

அதையே நீங்களும் செய்திருக்கலாம் தற்போது ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு தகுந்த வீரரை தான் நாம் பார்க்க வேண்டும். ஹர்திக் பாண்டியா நினைத்தது போல் மீண்டும் அணிக்கு வரவில்லை என்றால் நிச்சயம் நீங்கள் ஒரு வாய்ப்பை வீணடித்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம் .

ஏனென்றால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிவம் துபேக்கு அணியை சேர்த்திருக்கலாம். தொடரை வென்ற பிறகாவது சிவம் துபேருக்கு வாய்ப்பு வழங்கிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு முக்கிய வீரரை வெளியே அனுப்பிவிட்டு சிவம் துபேவை விளையாட வைத்திருக்க வேண்டும். ஆனால் வாய்ப்பை இந்தியா வீணடித்து விட்டது என்று ஜாகிர் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

Story first published: Sunday, December 10, 2023, 22:38 [IST]
Other articles published on Dec 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+