மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது t20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். இதில் எட்டு இமாலய சிக்சர்களும் ஏழு பவுண்டரிகளும் அடங்கும்.
இந்திய அணி தடுமாறிய நிலையில் களத்திற்கு வந்த சூரியகுமார் யாதவ், டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சிறந்த இன்னிங்ஸை ஆடி இருப்பதாக முன்னாள் வீரர்கள் கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி வருகிறார்கள்.

ஆனால் சூரியகுமார் யாதவை சதம் அடித்த பிறகும் ரசிகர்கள் அடித்து கிண்டல் செய்து வருகிறார்கள். அதற்குக் காரணம் சூரியகுமார் யாதவ் செய்த ஒரு காரியம்தான். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறிய போது சூரியகுமார் யாதவ் களத்திற்கு வந்தார். ஆனால் அவர் ஒரு பந்தை கூட சரியாக அடிக்காமல் தடுமாறினார்.
இதன் காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவியது. சூரியகுமார் யாதவ் மட்டும் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் அடித்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றிருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்தியா விளையாடிய ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்ததால் தான் சூரியகுமார் யாதவால் அடிக்க முடியவில்லை என்றும் இதனை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் ஒரு மாதம் ஆகியும் சூரியகுமார் யாதவை கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள்.
இன்று சதம் அடித்த சூரியகுமார் யாதவ், அன்று தேவைப்பட்டபோது சரியாக விளையாடவில்லை என்றும் டி20 கிரிக்கெட்டில் அதிரடி மன்னனாக விளங்கும் சூரியகுமார் யாதவ், ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு சாதாரண பவுலர் போல் ஆடியதாகவும் விமர்சித்து வருகிறார்கள். இனி சூரியகுமார் யாதவ் எவ்வளவு பெரிய இன்னிங்ஸ் ஆடினாலும் உலக கோப்பையில் அவர் சரியாக விளையாடாதது தான் முதலில் ஞாபகத்துக்கு வருவதாகவும் ரசிகர்கள் கேட்கின்றனர்.
இதனால் இப்போது அடித்து என்ன பயன் அப்போது விட்டு விட்டீர்களே என்று தான் கேட்கத் தோன்றுவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சூரியகுமார் யாதவை கிண்டல் செய்து பல மீம்ஸ்களும் மீண்டும் வர தொடங்கி விட்டது. தென் ஆப்பிரிக்க மண்ணில் சதம் அடித்து இந்தியாவை காப்பாற்றிய சூரியகுமார் யாதவை ரசிகர்கள் இன்னும் கிண்டல் செய்து வருவது வேடிக்கையாகிவிட்டது.