Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆச்சரியம் தரும் இந்தியாவின் ரெக்கார்ட்.. இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி யாருக்கு சாதகம்.. விவரம்

பெர்த்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் ரெக்கார்ட்கள் அட்டகாசமாக உள்ளது தெரியவந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தான் இருப்பதிலேயே அதிகபட்சமாக 4 புள்ளிகளை எடுத்து முதலிடத்தில் உள்ளது.

முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. இதனையடுத்து தனது 3வது போட்டியாக தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது.

தென்னாப்பிரிக்க போட்டி

தென்னாப்பிரிக்க போட்டி

இரு அணிகளும் மோதும் இந்த லீக் போட்டி நாளை ( அக்டோபர் 30 ) மாலை 4.30 மணிக்கு பெர்த் நகரத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா 4 புள்ளிகளுடன் இருப்பதை போன்றே தென்னாப்பிரிக்க அணி 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சவாலான போட்டி

சவாலான போட்டி

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனென்றால் இந்தியாவை போலவே தென்னாப்பிரிக்க அணியிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என அசுரத்தனமான ஃபார்மில் உள்ளனர். குறிப்பாக பேட்டிங்கில் குயிண்டன் டிக்காக், மில்லர், ரூசோவ் போன்றோரும், பவுலிங்கில் நார்ட்ஜே, ரபாடா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதனால் கடும் போட்டி காத்துள்ளது.

 இந்தியாவுக்கு சாதகம்

இந்தியாவுக்கு சாதகம்

இந்நிலையில் இதில் இந்தியாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு என்பது பழைய ரெக்கார்ட்கள் மூலம் தெரியவந்துள்ளது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 5 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில் இந்திய அணி 4 முறையும் தென்னாப்பிரிக்கா ஒரே ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் விராட் கோலி தான் அட்டகாச ரெக்கார்டை வைத்துள்ளார்.

டி20 ரெக்கார்ட்

டி20 ரெக்கார்ட்

மொத்தமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இரு அணிகளும் 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 13 முறையும், தென்னாப்பிரிக்க அணி 9 முறையும் வெற்றிகளை பெற்றுள்ளன. 2 போட்டிகளில் முடிவுகள் எட்டப்படவில்லை. இதன் மூலம் இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Story first published: Saturday, October 29, 2022, 15:06 [IST]
Other articles published on Oct 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+