Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு இடத்திற்காக மோதி வரும் 2 சீனியர்கள்.. 3வது டெஸ்டில் நீடிக்கும் குழப்பம்.. கோலி கொடுத்த அப்டேட்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சிராஜுக்கு மாற்றாக எந்த வீரரை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

Recommended Video

India vs South Africa 3rd Test Pitch Report

இரு அணிகளும் மோதும் கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாந்து மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது.

இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் உள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்திய அணியை பொறுத்தவரையில் வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற காத்துள்ளது. ஆனால் இந்த சமயத்தில் தான் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கலந்துக்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. 2வது டெஸ்டின் போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறிய முகமது சிராஜ் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை என்றும் மாற்று வீரர் தேர்வு செய்யப்படுவார் என்றும் விராட் கோலி கூறியுள்ளார்.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

இந்நிலையில் யாரை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்பதில் தான் சிக்கல் உள்ளது. இந்திய அணியில் மாற்று வீரர்களாக உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா என 2 சீனியர்கள் உள்ளனர். இந்திய அணியின் அனுபவ வீரர்களான இவர்கள் இரண்டு பேருமே கேப்டவுன் மைதானத்திற்கு பொறுத்தமான செயல்பாட்டை கொண்டவர்கள் தான். ஏனென்றால் கேப்டவுன் மைதானத்தில் வேகம் மற்றும் பவுன்சர் என இரண்டிற்குமே ஒத்துழைக்கும் பிட்ச் உள்ளது.

என்ன குழப்பம்

என்ன குழப்பம்

கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியிடம் நிலையான பவுன்சர்களை வீசாததே பின்னடைவாக சென்றது. இதற்கு காரணம் உயரமான வேகப்பந்துவீச்சாளர் இல்லை என்பது தான். ஆனால் பவுன்சர்களுக்கு அதிகம் ஒத்துழைக்கக்கூடிய கேப்டவுன் மைதானத்தில் நிச்சயம் இஷாந்த் சர்மா உதவலாம். அதே போல முக்கிய போட்டிகளில் அவரின் அனுபவம் உதவலாம். ஆனால் இஷாந்த் சர்மாவிடம் முன்பு இருந்ததை போன்ற ஸ்விங் இல்லை எனக்கூறப்படுகிறது. அதிவேகத்தில் பந்துவீசும் உமேஷ் யாதவிடம் அந்த ஸ்விங் சரியாக இருக்கும். எனவே ஸ்விங் தேவை என்றால் அவரை எடுத்தே தீர வேண்டும்.

 யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

எது எப்படி இருந்தாலும், இந்திய அணியில் ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் என நன்கு ஸ்விங் செய்யக்கூடிய பவுலர்கள் உள்ளனர். இதனால் உயரமான இஷாந்த் சர்மாவை கொண்டு வந்தால் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சற்று திணறடிக்கலாம் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Monday, January 10, 2022, 20:31 [IST]
Other articles published on Jan 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+