For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிங்கு சிங் மீது தவறான இமேஜ் ஆனா.. உண்மையை உடைத்த தென்னாப்பிரிக்க ஜாம்பவான் காலிஸ்

டர்பன் : இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வரும் ரிங்கு சிங் குறித்து இருக்கும் தவறான இமேஜை அடித்து உடைத்து இருக்கிறார் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஜாக்கஸ் காலிஸ்.

ரிங்கு சிங் ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில், பலத்தை மட்டுமே பயன்படுத்தி பேட்டிங்கில் ரன் குவிக்கும் உள்ளூர் வீரர். அவருக்கு பேட்டிங் திறமை எல்லாம் இல்லை என்பது போன்ற பிம்பம் மற்ற அணிகளிடம் உள்ளது. அதை உடைத்து ரிங்கு சிங் குறித்து புகழ்ந்து இருக்கிறார் ஜாக்கஸ் காலிஸ்.

India vs South Africa : Jacques Kallis opens up about Rinku Singh batting abilities

ரிங்கு சிங் இந்திய டி20 அணியின் அடுத்த ஃபினிஷராக பார்க்கப்படுகிறார். யுவராஜ் சிங், தோனி போன்ற ஜாம்பவான்களுக்கு பின் இந்திய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெற்று இருந்தார். ஆனால், அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் நிலையான ஒரு பேட்ஸ்மேன் ஆறாவது வரிசையில் தேவைப்பட்டது.

அப்போது தான் ரிங்கு சிங் கிடைத்தார். 2023 ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் வரிசையாக 5 சிக்ஸ் அடித்து ஜெயிக்கவே முடியாத போட்டியை வென்று கொடுத்தார். அதன் பின் கவனம் பெற்ற அவர் அதே போன்ற ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தினார். அதன் பின் இந்திய டி20 அணியிலும் இடம் பெற்றார்.

ஆனாலும், ரிங்கு சிங் ஏதோ குருட்டு ஆட்டம் ஆடுவதை போலவும், பேட்டிங் திறமையால் இன்றி தன் பலத்தால் ஷாட் அடித்து சிக்ஸ் அடிப்பது போலவும் ஒரு எண்ணம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் உள்ளது. ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஐந்து போட்டிகளில் ஆடிய போதும் ஒரு சர்வதேச வீரருக்கான அங்கீகாரம் அவருக்கு இதுவரை கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜாக்கஸ் காலிஸ் ரிங்கு சிங் மீது இருக்கும் பிம்பத்தை அடித்து உடைத்தார். அவர் கூறுகையில், "ரிங்கு சிங் ஒரு தரமான ஆட்டம் கொண்டவர். . கடந்த சில மாதங்களாக அவர் இந்தியாவுக்காக என்ன செய்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். போட்டியை முடிக்கும் ஃபினிஷராக இருக்கிறார். அவர் ஆடுவது முட்டாள்தனமான கிரிக்கெட் அல்ல. தேவைப்படும் போது நல்ல கிரிக்கெட் ஷாட்களை அவர் ஆடுகிறார். ஒரு இன்னிங்ஸின் பின் இறுதியில் அணிக்கு தேவை இருக்கும் போது அவர் அதிரடி ஆட்டம் ஆடக் கூடியவராக இருக்கிறார்." என்று அவரைப் பற்றி புகழ்ந்து பேசினார் காலிஸ்.

"அவர் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய சிறந்த பேட்டர் என்பது உங்களுக்குத் தெரியும். மற்ற வீரர்கள் ஆட்டத்தையும் சேர்த்து பார்த்தால், அவர் ஒரு வலிமையான ஃபினிஷிங்கை கொடுக்கிறார். ஒருவர் ஃபினிஷிங் செய்யவில்லை என்றால், அணியில் இன்னும் சிலரைப் பெற்றுள்ளீர்கள். அவர்கள் அதைச் செய்யலாம். எனவே என்னைப் பொறுத்தவரை, ரிங்கு ஆறாவது இடத்தில் பேட்டிங் இறங்க வேண்டும், அவருக்கு அணியில் சரியான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" என்று ஜாக்கஸ் காலிஸ் கூறினார்.

Story first published: Monday, December 11, 2023, 21:01 [IST]
Other articles published on Dec 11, 2023
English summary
India vs South Africa : Jacques Kallis opens up about Rinku Singh batting abilities
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+