Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே ரெக்கார்டை உடைத்த பும்ரா.. உலகிலேயே நம்பர் 1

கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 2 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 6 விக்கெட்களும் வீழ்த்தினார். இதை அடுத்து மிகக் கடினமான கேப் டவுன் பிட்ச்சில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை விடுத்து, அதிக விக்கெட் வீழ்த்திய வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா வேகமாக முன்னேறி இருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் பும்ரா 3 போட்டிகளில் ஆடி 18 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வேகப் பந்துவீச்சாளர்களில் பும்ரா உலகிலேயே பும்ரா மட்டுமே கேப் டவுனில் அதிக விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் வீரர்களில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பெற்றுள்ளார்.

INDIA vs SOUTH AFRICA : Jasprit Bumrah breaks Shane Warne record in Cape Town

கேப் டவுன் மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் பிலித் 25 விக்கெட்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 1906 - 1910 காலகட்டத்தில் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதன் பின் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே 1994 முதல் 2006 காலகட்டத்தில் கேப் டவுனில் 17 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

அதன் பின் தற்போது பும்ரா 2018 - 2024 காலகட்டத்தில் 18 விக்கெட்கள் வீழ்த்தி வார்னே சாதனையை முந்தி உள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 17 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இவர்கள் தவிர 10 விக்கெட்களுக்கு அதிகமாக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஒருவர் கூட தற்போது கிரிக்கெட் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தென்னாப்பிரிக்காவின் கோட்டையான கேப் டவுனில் உலகிலேயே நம்பர் 1 பந்துவீச்சாளராக தன் கொடியை பறக்க விட்டுள்ளார் பும்ரா.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடினமான பிட்ச்சில் அபாரமாக பந்து வீசி தென்னாப்பிரிக்க அணியை முதல் இன்னிங்க்ஸில் 55 ரன்களிலும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 176 ரன்களிலும் ஆல் - அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 13 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை 1 - 1 என சமன் செய்தது.

Story first published: Friday, January 5, 2024, 14:50 [IST]
Other articles published on Jan 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+