For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA : 4வது ஸ்டம்ப்புக்கு வைத்த குறி.. பாய்ந்த ஜெய்ஸ்வால்.. வாயடைத்து போன மார்கிரம்.. சீறிய சிராஜ்

கேப் டவுன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4வது ஓவரிலேயே முதல் விக்கெட் வீழ்த்தியது இந்திய அணி. சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை காலி செய்தார். தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.

இந்தப் போட்டியில் முகமது சிராஜ் வீசிய நான்காவது ஓவரில், தென்னாப்பிரிக்க அணியின் ஐடன் மார்கிரம் பந்தை தடுக்க முயன்றும் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜெய்ஸ்வால் ஸ்லிப்பில் சிறப்பாக கேட்ச் பிடித்து விக்கெட் விழ முக்கிய காரணமாக இருந்தார்.

INDIA vs SOUTH AFRICA : Mohammed Siraj bowled to 4th stump and Jaiswal took Aiden Markram catch

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி துவக்கத்திலேயே விக்கெட் பெற வேண்டும் என்ற பதற்றத்தில் இருந்தது. முதலில் பும்ரா, முகமது சிராஜ் பந்து வீசினர்.

சிராஜ் வீசிய நான்காவது ஓவரின் இரண்டாவது பந்து சரியாக ஆஃப் சைடு நான்காவது ஸ்டம்ப்பு லைனுக்கு வீசப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் போன்ற பந்துகளை வீசும் போதும் ஸ்லிப் அல்லது விக்கெட் கீப்பரிடம் பேட்ஸ்மேன் கேட்ச் கொடுக்க வாய்ப்பு உள்ளது.

அதே போல சிராஜ் வீசிய அந்த பந்தை மார்கிரம் தடுக்க முயன்றும் பந்து பேட்டில் பட்டு ஸ்லிப் திசைக்கு சென்றது. தரைக்கு அருகே சென்ற பந்தை ஸ்லிப்பில் நின்று இருந்த ஜெய்ஸ்வால் குனிந்து சென்று கேட்ச் பிடித்தார். அதை எதிர்பார்க்காத மார்கிரம் வாயடைத்துப் போய் நின்றார். அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க அணி 5 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. அந்த விக்கெட்டை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா வரிசையாக விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அதனை அடுத்து முகமது சிராஜ் - பும்ரா கூட்டணி சிறப்பாக பந்து வீசியது. டீன் எல்கர் 4, ஜோர்சி 2, ஸ்டப்ஸ் 2, பேடிங்காம் 12, கில் 15 ரன்கள் எடுத்து வரிசையாக வெளியேறினர். தென்னாப்பிரிக்க அணி 45 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. சிராஜ் 6, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர். 18 ஓவர்களுக்குள் 7 விக்கெட்களை இழந்த தென்னாப்பிரிக்க அணி மோசமான நிலையில் இரண்டாவது டெஸ்டை துவக்கியது. பின்னர் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா. சிராஜ் 6 விக்கெட், பும்ரா 2 விக்கெட், முகேஷ் குமார் 2 விக்கெட் வீழ்த்தினர்.

Story first published: Wednesday, January 3, 2024, 14:25 [IST]
Other articles published on Jan 3, 2024
English summary
INDIA vs SOUTH AFRICA : Mohammed Siraj bowled to 4th stump and Jaiswal took Aiden Markram catch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+