Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: அட்டகாசமான பிட்ச் ரெடி.. 5 நாட்களும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை..3வது டெஸ்டில் சுவாரஸ்யம்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு சவாலான பிட்ச் காத்துள்ளது.

Recommended Video

India vs South Africa 3rd Test Pitch Report

இந்தியாவுக்கு மிகவும் சாதகமான வாண்டரர்ஸ் மைதானத்திலேயே தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனால் இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 - 1 என சமநிலை அடைந்துள்ளது. வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி தென்னாப்பிரிக்காவின் கோட்டையான கேப்டவுன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கடைசி டெஸ்ட்

கடைசி டெஸ்ட்

இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தும். ஆனால் இந்த மைதானத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன. ஏனென்றால் போட்டி நடைபெறும் நியூலாந்து மைதானம் தென்னாப்பிரிக்க அணிக்கு அதிக வெற்றிகளை தேடிக்கொடுத்த ஒன்றாகும். இங்கு இதுவரை இதுவரை 58 போட்டிகளில் விளையாடி 21 வெற்றிகள், 21 தோல்விகளை சந்தித்துள்ளன, 11 போட்டிகள் டிராவாகும். எனவே இந்திய அணி சற்று கவனமாக இருக்க வேண்டும்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்நிலையில் இந்த முக்கிய போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. நியூலாந்து மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாகும். தென்னாப்பிரிக்க மைதானங்களிலேயே இங்கு பவுன்சர்கள் மற்றும் ஸ்விங் நிறைய ஆகும் என கூறப்படுகிறது. இதே போல இங்கு அதிகப்படியான வேகம் இருப்பதால் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் ஷாட் பெரும் அளவில் மிஸ் ஆகாது.

அஸ்வினுக்கு சாதகம்

அஸ்வினுக்கு சாதகம்

வேகப்பந்துவீச்சை போன்றே சுழற்பந்துவீச்சாளர்களும் இங்கு சோபிக்கலாம். அதாவது தென்னாப்பிரிக்க களங்களிலேயே சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவக்கூடிய ஒரே களம் இதுவே ஆகும். எனவே ரவிச்சந்திரன் அஸ்வின் தனது முழு திறனையும் இந்த போட்டியில் காட்ட முடியும். அவருக்கு உறுதுணையாக கூடுதல் ஸ்பின்னரையும் கொண்டு வர அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

எப்படி சமாளிக்கும் இந்தியா

எப்படி சமாளிக்கும் இந்தியா

இந்த மைதானத்தில் இதுவரை 5 முறை விளையாடியுள்ள இந்திய டெஸ்ட் அணி ஒரு முறை கூட வெற்றிக்கு அருகில் கூட சென்றதில்லை. 3 முறை தோல்வியும், 2 முறை டிராவும் செய்துள்ளது. மறுபுறம் தென்னாப்பிரிக்க அணி அதிக வெற்றிகளை பெற்ற மைதானமாகவும் கேப்டவுன் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Monday, January 10, 2022, 20:27 [IST]
Other articles published on Jan 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+