Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்.. போட்டிகள் எப்போது? எங்கு பார்ப்பது? முழு அட்டவணை

ராஞ்சி: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் நவம்பர் 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது. சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அந்தத் தோல்வியை ஈடுகட்ட தயாராகி வருகிறது. இந்த தொடரில் மோத உள்ள இந்தியா, தென்னாப்பிரிக்காஅணிகளின் வீரர்கள் பட்டியல், இரு அணிகளும் மோதிய போட்டி விவரம், போட்டி நேரம், இடம், நேரலை விவரம் ஆகியவற்றை காணலாம்.

முதல் போட்டி முன்னாள் கேப்டன் தோனியின் ஊரான ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இதற்காக விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஏற்கனவே ராஞ்சி சென்றடைந்துள்ளனர். மறுபுறம் டெஸ்ட் தொடரை வென்ற உற்சாகத்தில் இருக்கும் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் உள்ளது.

India vs South Africa ODI Series Full Schedule Telecast Details and Where to Watch Live

டெஸ்ட் தொடரின் போது கழுத்தில் காயமடைந்த வழக்கமான கேப்டன் சுப்மன் கில், இந்த ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. அதேபோல ஸ்ரேயாஸ் ஐயரும் காயத்தில் உள்ளார். இதனால், அணியின் கேப்டன் பொறுப்பு விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்த மண்ணில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேசப் போட்டியில் களமிறங்கவுள்ளனர். இது ரசிகர்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் கை ஓங்கியுள்ளது?

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இதுவரை 94 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா 51 வெற்றிகளையும், இந்தியா 40 வெற்றிகளையும் பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாகத் தென்னாப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தினாலும்,. இந்தியாவில் நடந்த 32 போட்டிகளில், இந்தியா 18-ல் வென்றுள்ளது. தென்னாப்பிரிக்கா 14-ல் வென்றுள்ளது.

போட்டி அட்டவணை:

முதல் ஒருநாள் போட்டி: நவம்பர் 30 (ஞாயிறு) - ஜேஎஸ்சிஏ ஸ்டேடியம், ராஞ்சி.
இரண்டாவது ஒருநாள் போட்டி: டிசம்பர் 3 (புதன்) - ஷஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியம், ராய்ப்பூர்.
மூன்றாவது ஒருநாள் போட்டி: டிசம்பர் 6 (சனி) - ஏசிஏ-விடிசிஏ ஸ்டேடியம், விசாகப்பட்டினம்.

போட்டி நேரம் & நேரலை விவரம்:

இந்தத் தொடரின் 3 போட்டிகளுமே பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெறும். மூன்று போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு போட்டிகள் தொடங்கும். இந்த ஒருநாள் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Star Sports Network) சேனல்களில் நேரலையாகக் காணலாம். மொபைலில் பார்க்க விரும்புபவர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலியில் நேரலையாகக் கண்டு ரசிக்கலாம்.

அணிகள் விவரம்:

இந்திய அணி:

கே.எல். ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நித்திஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜூரல்.

தென்னாப்பிரிக்கா அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், எய்டன் மார்க்ரம், டோனி டி சோர்ஸி, ரயான் ரிக்கல்டன், டேவிட் பிரேவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (விக்கெட் கீப்பர்), ராசி வான் டெர் டுசென், கைல் வெரைன், வியான் முல்டர், மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, ஜெரால்ட் கோட்ஸி.

Story first published: Friday, November 28, 2025, 21:09 [IST]
Other articles published on Nov 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+