Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. பிட்ச் எப்படி? மழை வருமா? பிளேயிங் 11 என்ன?

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அந்தத் தோல்விக்குப் பழிதீர்க்கும் முனைப்புடன் இன்று (நவம்பர் 30, ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. (JSCA) சர்வதேச மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக இந்த முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்திய ஜெர்சியில் களமிறங்குவது ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

India vs South Africa ODI Today in Ranchi Pitch Report Weather Update and Rohit-Kohli s Return

பிட்ச் ரிப்போர்ட்

ராஞ்சி மைதானம் பொதுவாக துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருவருக்குமே சமமான வாய்ப்பை வழங்கக்கூடியது. ஆரம்பகட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். பந்து பேட்டுக்கு நன்றாக வரும் என்பதால், நிலைத்து நின்றுவிட்டால் பெரிய ஸ்கோரை எட்டலாம்.

ஆட்டம் செல்லச் செல்ல, குறிப்பாக மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்குப் பிட்ச் ஒத்துழைக்கும். இது பகல்-இரவு ஆட்டம் என்பதால், இரண்டாவது பாதியில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது. அப்படிப் பனி பெய்தால், சேஸிங் செய்வது சற்று எளிதாக இருக்கும்.

வானிலை நிலவரம்

ராஞ்சியில் இன்று மழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், குளிர் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானம் 93% மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரத்தில் வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும், மாலையில் 15 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவில் 13 டிகிரி செல்சியஸ் வரை குறையவும் வாய்ப்புள்ளது. காற்றின் தரம் சற்று மோசமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அணி நிலவரம்:

சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளதால், கே.எல்.ராகுல் கேப்டனாகச் செயல்படுவார். 2027 உலகக்கோப்பையை மனதில் வைத்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

உத்தேச ஆடும் லெவன் (Probable XI):

இந்திய அணி:

ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), நித்திஷ் குமார் ரெட்டி, கே.எல்.ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்.

தென்னாப்பிரிக்கா அணி:

எய்டன் மார்க்ரம், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, ரூபின் ஹெர்மன், டெவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், நாண்ட்ரே பர்கர், லுங்கி இங்கிடி.

Story first published: Sunday, November 30, 2025, 8:35 [IST]
Other articles published on Nov 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+