Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 வீரர்களுக்கு நல்ல வேட்டை இருக்கு.. இந்தியா vs தென்னாப்பிரிக்கா பிட்ச் ரிப்போர்ட்..காத்துள்ள சவால்

பெர்த்: தென்னாப்பிரிக்காவுடனான போட்டி நடைபெறும் மைதானத்தில் இந்திய அணிக்கு பெரும் சவால் காத்துக்கொண்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது 3வது போட்டியாக தென்னாப்பிரிக்க அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி நாளை மாலை 4.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை பந்தாடிய இந்திய அணி அதே பலத்துடன் தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்கொள்ள கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது

இந்திய போட்டி

இந்திய போட்டி

குரூப் பி பிரிவுக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 4 புள்ளிகளை பெற்று டாப்பில் உள்ளது. இதே போல தென்னாப்பிரிக்க அணி 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து வருகிறது. எனவே நாளை நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகும். இதனால் இப்போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்திய அணிக்கு சவால்

இந்திய அணிக்கு சவால்

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணிக்கு கடும் சவால்கள் நிறைந்துள்ளன. இதற்கு காரணம் பிட்ச் ரிப்போர்ட் தான். போட்டி நடைபெறும் பெர்த் மைதானம் தான் ஆஸ்திரேலியாவிலேயே அதிக வேகமும், பவுன்ஸும் ஆகக்கூடிய பிட்ச்-ஆக பார்க்கப்படுகிறது. இங்கு முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் தான் இருக்கும்.

இரு வீரர்களுக்கு வேட்டை

இரு வீரர்களுக்கு வேட்டை

அதிவேக பிட்ச் என்பதால் தென்னாப்பிரிக்காவின் ரபாடா, நார்ட்ஜே மற்றும் மார்கோ யான்சன் ஆகியோருக்கு விருந்தாக அமையும். 145+ வேகத்தில் வீசுவார்கள் என்பதால் இந்திய அணி வீரர்கள் மிகுந்த கவனத்தோடு ஆட வேண்டும். சற்று மிஸ்ஸானால் கூட ஸ்டம்ப்கள் பறக்கும். ஆனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இது சிறந்த வேட்டையாகும். ஏனென்றால் அவர்கள் இருவருமே பேட்டை சுழற்றாமல் வேகத்தை பயன்படுத்தி சரியாக பவுண்டரி அடிக்கக்கூடியவர்கள் ஆகும்.

டாஸ் வெல்லும் அணி

டாஸ் வெல்லும் அணி

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் ஆடும் அணி சராசரியாக 140 ரன்களை தான் அடிக்கும் எனத் தெரிகிறது. எனவே பிட்ச்-ஐ ஸ்லோ செய்வதற்காக டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தான் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் பிட்ச் ஸ்லோ ஆனால் பந்தை சரியாக கணித்து சிக்ஸருக்கு விளாச முடியும்.

Story first published: Saturday, October 29, 2022, 17:49 [IST]
Other articles published on Oct 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+