Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA பயிற்சி ஆட்டம்.. சாம்சன் இடம் காலி.. இஷான் கிசன் இடத்தை உறுதி செய்த சூர்யகுமார்

மும்பை: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2026 பயிற்சி ஆட்டம் இன்று மும்பையின் நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில் நடைபெறுகிறது. உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் ஒரே பயிற்சி போட்டி இது என்பதால், இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். வரும் பிப்ரவரி 7 சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் அமெரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தொடக்கப் போட்டிக்கு முன்னதாக, அணியின் சிறந்த கலவையை கண்டறிந்து களமிறங்க இந்திய அணி நிர்வாகம் இந்த பயிற்சி ஆட்டத்தில் முனைப்புடன் உள்ளது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரர் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சஞ்சு சாம்சன், நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சிறப்பாக செயல்படாததால், அவர் தனது இடத்தையும் தொடக்க வீரர் வாய்ப்பையும் இந்த உலகக் கோப்பையில் இழக்கக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது. இஷான் கிஷன் இன்று தொடக்க வீரராகக் களமிறங்கி விக்கெட் கீப்பிங் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சஞ்சு சாம்சன் அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அணிக்குள் இடம்பெறாத வாய்ப்புகள் அதிகம்.இந்தியா ஏ அணிக்காக அமெரிக்காவுக்கு எதிராக (பிப்ரவரி 2) நவி மும்பையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய திலக் வர்மா, இன்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணிக்காக களமிறங்குகிறார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இந்த பயிற்சி ஆட்டம், ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், சிவம் தூபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷத் ராணா, குல்தீப் யாதவ்.

தென்னாப்பிரிக்கா அணியின் வீரர்கள் பட்டியல்: ஐடன் மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெவால்ட் பிரெவிஸ், ரியான் ரிக்கெல்டன், ஜார்ஜ் லிண்டே, ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கார்பின் போஷ், கேஷவ் மகாராஜ், க்வெனா மாபகா, லுங்கி இங்கிடி, ஆன்ரிச் நோர்க்யா, மார்கோ ஜான்சென், காகிசோ ரபாடா, டேவிட் மில்லர்.

Story first published: Wednesday, February 4, 2026, 18:49 [IST]
Other articles published on Feb 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+