Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இனியும் பொறுக்க முடியாது”.. இளம் வீரர் மீது கடுப்பான டிராவிட்.. 4வது டி20ல் முக்கிய மாற்றம்!

ராஜ்கோட்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி முக்கிய மாற்றம் ஒன்றை செய்யவுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளிடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 - 1 என்ற பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியாவின் வாழ்வா? சாவா? என்ற 4வது டி20 போட்டி இன்று இரவு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

4வது டி20

4வது டி20

இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவியிருந்த இந்திய அணி, 3வது போட்டியில் ப்ளேயிங் 11ல் எந்தவொரு மாற்றத்தையும் செய்யாமல் ரிஸ்க் எடுத்தது. அதற்கு பலனாக ருதுராஜ் கெயிக் வாட் மற்றும் ஹர்ஷல் பட்டேல் அட்டகாச கம்பேக் தந்தனர். இந்தியா வெற்றியும் பெற்றது.

இந்நிலையில் வெற்றி பெற்ற போதும், மாற்றத்தை செய்ய வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது.

பேட்டிங் படை

பேட்டிங் படை

இந்திய அணியின் ஓப்பனிங்கில் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் நன்கு செட்டாகிவிட்டனர். அவர்களை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் என நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். கேப்டன் ரிஷப் பண்ட் மட்டும் தனது பழைய ஃபார்முக்கு வர வேண்டும் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றனர்.

பவுலிங்கில் மாற்றம்

பவுலிங்கில் மாற்றம்

பந்துவீச்சை பொறுத்தவரையில் தான் மாற்றமே தேவைப்படுகிறது. புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் பக்கபலமாய் இருக்கின்றனர். ஆனால் ஆவேஷ் கான் மட்டும் இன்னும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவரின் பவுலிங்கை சுலபமாக அடிக்கின்றனர். இதனால் அவருக்கு இனிமேலும் வாய்ப்பு தந்தால் ரன் கசியும் என அர்ஷிதீப் சிங்கிற்கு வாய்ப்பு தர ஆலோசித்து வருகின்றனர்.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, யுவேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்

Story first published: Friday, June 17, 2022, 13:58 [IST]
Other articles published on Jun 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+