Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: டி20 வரலாற்றை புரட்டிப் போட்ட இந்திய அணி.. ஒரே ஆண்டில் அதிக வெற்றிகளை குவித்து சாதனை

டர்பன்: எந்த கிரிக்கெட் அணியும் நினைத்துப் பார்க்க முடியாத சர்வதேச டி20 சாதனையை இந்திய அணி செய்துள்ளது. நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இது இந்த ஆண்டு இந்திய அணி பெறும் 22 வது வெற்றி ஆகும்.

இதன் மூலம் ஒரே ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட அணியாக இந்திய அணி இருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை இந்திய அணி 23 போட்டிகளில் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 22 வெற்றிகளை பெற்று அசத்தி உள்ளது இந்திய அணி.

ind vs sa india south africa 20

2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆடியது. அந்த தொடரை முழுவதுமாக இந்தியா கைப்பற்றியது. அடுத்து 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எட்டு போட்டிகளில் விளையாடி அந்த எட்டிலும் வென்றது.

அடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்து மற்ற நான்கில் வெற்றி பெற்றது. அதன் பின் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக மொத்தமாக ஆறு போட்டிகளில் விளையாடி ஆறிலும் இந்தியா வென்றது. அதைத் தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் விளையாடி அதிலும் வென்று இருக்கிறது.

இதன் மூலம் இந்திய அணி 2024 ஆம் ஆண்டு இதுவரை ஆடிய 23 போட்டிகளில் 22 வெற்றிகளுடன், 95.6 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் ஒரு அணி பெற்ற அதிக வெற்றி சதவீதம் ஆகும். இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு உகாண்டா அணி ஒரே ஆண்டில் 29 வெற்றிகளை பெற்று 87.98 சதவீதத்துடன் இருந்தது.

அந்த சாதனையை இந்தியா இந்த ஆண்டு முறியடித்து இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு இந்திய அணி 70 சதவீத வெற்றியுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஒரே ஆண்டில் இந்திய அணி சர்வதேச டி20 போட்டிகளில் 28 வெற்றிகளை பதிவு செய்து இருந்தது. இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருவது தெரிகிறது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 202 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா 17.5 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Saturday, November 9, 2024, 8:21 [IST]
Other articles published on Nov 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+