“என்னால் வர முடியாது”.. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்.. விராட் கோலி எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு!
மும்பை: இந்திய அணி வீரர் விராட் கோலி அதிருப்தியின் வெளிப்பாட்டால் செய்துள்ள விஷயம் ரசிகர்களுக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய கேப்டன் ஆனார். கோலி கேப்டனாக தொடர்ந்து செயல்பட விருப்பம் தெரிவித்தும், அதனை ஏற்றுக்கொள்ளாமல் பிசிசிஐ அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.
எனவே தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் முதல் ரோகித் தான் முழு நேர கேப்டனாக இருப்பார். டெஸ்ட் அணிக்கு மட்டும் விராட் கோலி கேப்டனாக செயல்படவுள்ளார்.

மும்பை பயோ பபுள்
இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் (டிசம்பர் 12) நேற்றுக்குள் மும்பை ஓட்டலில் உள்ள பயோ பபுளுக்குள் வந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

கோலியின் பிடிவாதம்
இந்நிலையில் பிசிசிஐ மீதுள்ள அதிருப்தியால் விராட் கோலி பபுளுக்குள் வர முடியாது என்ற நிலைபாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கால அவகாசம் முடிந்தும் தற்போது வரை கோலி பயோ பபுளுக்கு செல்லவில்லை. அவர் தனிபட்ட காரணங்கள் இருக்கலாம் என்றும், நாளைக்குள் பபுளுக்குள் நுழைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை தவிர்த்து ரோகித் சர்மா, புஜாரா, ரகானே உள்ளிட்ட மற்ற வீரர்கள் அனைவரும் பயோ பபுளுக்குள் சென்றுவிட்டனர்.

தென்னாப்பிரிக்க டூரில் இல்லையா?
விராட் கோலியின் நிலை குறித்து அறிய பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் நண்பர்களும் தொடர்பு கொண்டு பார்த்துவிட்டதாகவும், ஆனால் அவர் எந்தவித தொலைப்பேசி அழைப்புகளையும் ஏற்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் அவர் பங்கேற்பாரா என்பதிலேயே சந்தேகம் நிலவுகிறது.
Recommended Video

பயணத்திட்டம்
மும்பை பயோ பபுள் சூழலில் 3 நாட்களுக்கு தங்கவுள்ள இந்திய வீரர்கள், வரும் டிசம்பர் 16ம் தேதியன்று தனி விமானம் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு செல்லவுள்ளனர். அங்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் நேரடியாக பபுள் டூ பபுள் மாற்றப்பட்டு, 4 - 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications