IND vs SA - என்ன இப்படி வெளிப்படையா பேசிட்டாரு.. பிசிசிஐ கோபத்திற்கு ஆளாக போகும் ரிங்கு சிங்
டர்பன் : இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு இந்திய அணி விளையாடுகிறது. இந்த நிலையில் தென்னாபிரிக்க ஆடுகளம் எப்போதுமே வித்தியாசமாக செயல்படக்கூடியது.

இங்கு பந்து அதிவேகமாக பேட்டிற்கு வரும். மேலும் கொஞ்சம் பவுன்சும் இருக்கும். இதனால் இந்த ஆடுகளத்தில் எப்போதுமே ஆசிய விளையாட்டு வீரர்கள் தடுமாறுவார்கள். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணி வீரர் ரிங்கு சிங், இந்த தொடர் குறித்து வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். அதில்," நான் இங்கு பயிற்சி செய்த போது ஆடுகளத்தில் கொஞ்சம் கூடுதலாக பவுன்ஸ் இருந்ததை உணர்ந்தேன்.
இந்திய ஆடுகளங்களை விட இங்கு பந்து நன்றாகவே பவுன்ஸ் ஆகி வருகிறது. வேகமும் கூடுதலாக இருக்கிறது. இதனால் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டும் என்றால் இங்கு கூடுதல் நேரம் செலவழித்து பயிற்சி செய்ய வேண்டும். முதல் பயிற்சி முகாமை நான் மகிழ்ச்சியாக எதிர்கொண்டேன். காரணம் வெப்பம் இங்கு ஏற்ற வகையில் இருந்தது. அதே சமயம் டிராவிட் உடன் நான் சேர்ந்து பயிற்சி செய்தேன்.
அவர் நான் எப்படி விளையாடுவேனோ அதையே தொடர்ந்து செய்ய சொன்னார். என் மீது நம்பிக்கை வைக்க சொன்னார். என்னை பேட்டிங் வரிசையில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் விளையாட வழி வகுத்து தருவதாக கூறியுள்ளார். நடு வரிசையில் விளையாடும்போது அது கடுமையான சூழலை கொடுக்கும். உங்களை நீங்களே நம்பி விளையாட வேண்டும்.
என் சிறுவயதில் இருந்து நான் உத்தர பிரதேச அணிக்காக விளையாடும்போது இதே பேட்டிங் வரிசையில் தான் விளையாடினேன்.
இதனால் இந்த இடத்தில் எப்படி விளையாட வேண்டும். விக்கெட்டுகள் விழுந்தால் பிறகு அதனை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து எனக்கு நன்றாக தெரியும். முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தால் பார்ட்னர்ஷிப் அமைத்து நாம் நமது திறனை நம்பி விளையாட வேண்டும்.
நான் ரவி பிஸ்னாய், ஆர்ஸ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் எல்லாம் ஒன்றாக தான் இருக்கிறோம். ஒருவரின் இருப்பும் எங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. கிரிக்கெட்டை விட இதை தான் நான் மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்றால் உடல் தகுதி பிரமாதமாக இருக்க வேண்டும்.
அதை நோக்கியும் நான் உழைக்கிறேன் என்று ரிங்கு சென்று கூறியுள்ளார். தென்னாப்பிரிக்க ஆடுகளத்தை சமாளிக்க வேண்டும் என்றால் இந்த பயற்வி போதாது, கூடுதலாக பயிற்சி தேவை என்று பொருள்படும் வகையில் ரிங்கு சிங் தைரியமாக பேசி இருக்கிறார். இந்திய அணி இங்கு 3 நாட்களாக தான் பயிற்சி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications