Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் கடும் கோபம்.. மாறப் போகும் இந்திய அணி.. ஆவேஷ் கான் அணியில் சேர்ப்பு.. 2 வீரர்களுக்கு கல்தா

செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், இரண்டு பந்துவீச்சாளர்கள் மீது கேப்டன் ரோஹித் சர்மா கடும் கோபத்தில் இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன் காரணமாக, இந்திய டெஸ்ட் அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டு இருக்கிறார். முன்னதாக அனுபவ வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி காயத்தால் தொடருக்கு முன்பே நீக்கப்பட போது அவருக்கு மாற்று வீரரை இந்திய அணி அறிவிக்காமல் இருந்தது.

INDIA vs SOUTH AFRICA : Rohit Sharma asked to add Avesh Khan in test squad

இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ் இருப்பதால் அவர்களோடு பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்குரை வைத்து தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தலாம் என கேப்டன் ரோஹித் சர்மா திட்டம் போட்டு, ஷமிக்கு மாற்று வீரராக யாரையும் சேர்க்க வேண்டாம் என கூறி இருந்தார்.

ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவை தவிர மற்ற மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் சொதப்பியதால் இந்திய அணி இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக ஷர்துல் தாக்குர் மற்றும் பிரசித் கிருஷ்ணா சேர்ந்து 39 ஓவர்களில் 194 ரன்கள் வாரி இறைத்து இருந்தனர். அதாவது ஓவருக்கு 5 ரன்கள் கொடுத்து இருந்தனர். முகமது சிராஜ் முதலில் மோசமாக ரன்களை கொடுத்த போதும் பின்னர் ரன்களை கட்டுப்படுத்தி ஆறுதல் அளித்தார்.

அனுபவ பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் அஸ்வின் மட்டுமே சராசரியாக ஓவருக்கு 3 ரன்களுக்கும் குறைவாக ரன்களை கொடுத்து இருந்தனர். இந்த நிலையில், அதிக ரன்களை வாரி இறைத்த ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா மீது பெரும் அதிருப்தியில் இருந்த ரோஹித் சர்மா, பத்திரிக்கையாளர் சந்திப்பில், அணியில் வாய்ப்பு கொடுத்தால் நன்றியுடன் ஆடி அணிக்கு தேவையானதை செய்ய வேண்டும் என பேசி தன் கோபத்தை காட்டி இருந்தார்.

இந்த நிலையில், அவர்கள் இருவரையும் வைத்துக் கொண்டு இரண்டாவது டெஸ்ட் போட்டியை சந்தித்தால் அது பெரிய சிக்கலாக மாறும் என்பதால் ஒருநாள் தொடரிலும், டி20 தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட ஆவேஷ் கானை அணியில் தேர்வு செய்யுமாறு கூறி இருக்கிறார் ரோஹித் சர்மா. பிசிசிஐ-யும் ஆவேஷ் கானை அதிகாரப்பூர்வமாக டெஸ்ட் அணியிலக் சேர்த்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டு, ஆவேஷ் கான், முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது

Story first published: Friday, December 29, 2023, 14:41 [IST]
Other articles published on Dec 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+