Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடக்கமே சோதனையா?? தென்னாப்பிரிக்க டி20 தொடர்.. இந்திய அணிக்குள் 3 முக்கிய பிரச்சினைகள்- விவரம்

மும்பை: தென்னாப்பிரிக்க தொடருக்காக இந்திய அணியில் 2 இக்கட்டான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் கே.எல்.ராகுல் - டிராவிட் உள்ளனர்.

Recommended Video

IND vs SA T20 Series: Indian Team-ல் 3 முக்கிய பிரச்சனைகள் | #Cricket | OneIndia Tamil

ஐபிஎல் தொடர் முடிவடைந்த சூழலில், அடுத்ததாக இந்தியா - தென்னாப்பிரிக்க மோது தொடர் நடைபெறவுள்ளது.

ஜூன் 9ம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 19ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

3 முக்கிய பிரச்சினை

3 முக்கிய பிரச்சினை

ரோகித், விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டதால் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டே செயல்படவுள்ளதாக கூறினார். இதனையடுத்து அனைத்து வீரர்களும் வரும் ஜூன் 5ம் தேதிக்குள் பெங்களூருவில் பயிற்சிக்காக ஒன்று சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 3 முக்கிய முடிவுகள எடுக்க வேண்டிய சூழலில் கேப்டன் ராகுல் மற்றும் டிராவிட் ஆகியோர் உள்ளனர்.

பாண்ட்யாவுக்கான இடம்

பாண்ட்யாவுக்கான இடம்

ஐபிஎல் 2022ல் ஹர்திக் பாண்ட்யா அட்டகாச கம்பேக் தந்துள்ளார். 17 போட்டிகளில் 487 ரன்கள் என குஜராத் அணியில் அதிக அடித்து அசத்தினார். ஆனால் இவர் பேட்டிங் ஆர்டரில் 3 அல்லது 4வது இடத்தில் தான் களமிறங்கினார். அதற்கு கீழ் ஆடவில்லை. ஆனால் இந்திய அணியில் கே.எல்.ராகுல் இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் என 4 வீரர்கள் பொருந்தியுள்ளனர். எனவே பாண்ட்யாவை ஃபினிஷராக செயல்பட வைக்க வேண்டும். ஆனால் அவர் அந்த சூழலில் தற்போது ஃபிட்டாக உள்ளாரா என்றே தெரியவில்லை. மற்றொருபுறம் தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் பணிக்காக காத்துள்ளார்.

ஓப்பனிங்கில் யார்

ஓப்பனிங்கில் யார்

இந்திய அணியின் ஓப்பனிங்கே பிரச்சினை தான். கே.எல்.ராகுலுடன் ஓப்பனிங் களமிறங்குவது யார் என குழப்பம் வந்துள்ளது. ஐபிஎல் 2022ல் இஷான் கிஷான் 418 ரன்களும், ருதுராஜ் கெயிக்வாட் 368 ரன்கள் என சிறப்பான ஃபார்மில் இருந்தனர். இருவருமே இந்தியாவின் எதிர்காலமாக வளர்க்கப்பட வேண்டியவர்கள். எனினும் வலுது - இடதுகை காம்பினேஷனுக்காக இஷானுக்கு வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

சுவாரஸ்ய தேர்வு

சுவாரஸ்ய தேர்வு

இந்திய அணியின் பவுலிங்கில், யுவேந்திர சாஹல் - குல்தீப் யாதவ் ஜோடி உறுதியாக உள்ளனர். வேகப்பந்துவீச்சில் 5 பேர் போட்டிக்கு உள்ளனர். இதில் ஹர்ஷல் பட்டேல் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டார். உம்ரான் மாலிக் மற்றும் ஆவேஷ் கான் அதிக விக்கெட்களை எடுத்தனர். எனினும் ரன்கள் அதிகப்படியாக கசிந்தது. மற்றொருபுறம் புவனேஷ்வர் குமார் - அர்ஷ்தீப் சிங் ஜோடி விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் ரன்களை கட்டுப்படுத்தினர். இதனால் பவுலிங் தேர்வு சுவாரஸ்யமாக இருக்க போகிறது.

Story first published: Friday, June 3, 2022, 11:02 [IST]
Other articles published on Jun 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+