ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை தான் அடிக்கிறாரு.. ஸ்டார் வீரரை பங்கம் செய்த முன்னாள் வீரர்
மும்பை : ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்கு முன்பாக இந்திய அணி மூன்று டி20 போட்டிகளில் தான் விளையாட உள்ளது. அதற்குள் இந்திய அணி தங்களது பிளேயிங் லெவனை தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் அதிக ரன்கள் எடுத்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கில்லுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ருதுராஜ் அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார்.

கில் இதுவரை நியூசிலாந்துக்கு எதிராக ஒரு சதமும் வெஸ்ட் இண்டீஸ் எதிராக 77 ரன்கள் மட்டும் தான். டி20 கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார். மற்ற போட்டிகளில் எல்லாம் மிகவும் குறைந்த ரன்களை எடுத்து இருக்கிறார். தற்போது நடைபெற்ற தென்னாப்பிரிக்கா தொடரில் 0 மற்றும் 8 ஆகிய ரன்களை தான் எடுத்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை கில் தொடர்ந்து ஒரே மாதிரி விளையாடுவதில்லை. அவர் இதுவரை ஒன்று இரண்டு பெரிய இன்னிங்ஸ் தான் ஆடி இருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவர் அடித்த ஸ்கோர் எல்லாம் மிகவும் சொற்ப ரன்கள் தான். இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும்போது கில்லுக்கு ஏதேனும் பிரச்சனை இருப்பது போல் தெரிகிறது.
பவர் பிளேவில் இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் ஓவர்களில் தான் கில் ஆட்டம் இழக்கிறார். திலக் வர்மா திறமை வாய்ந்த வீரராக இருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து வாய்ப்புகளை வீணடித்து வருகிறார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை சிறந்த முறையில் அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் எச்சரிக்கையாக அவர் இருக்க வேண்டும்.
அயர்லாந்து தொடரிலும் கூட அவர் சிறப்பாக விளையாடவில்லை. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கிடைத்த வாய்ப்பையும் அவர் வீணடித்து விட்டார். டி20 கிரிக்கெட்டில் நம்பர் மூன்றாவது இடத்தை பிடிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் அது விராட் கோலிக்கு சொந்தமானது. ஜித்தேஷ் சர்மாவும் தன்னுடைய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. என்னை கேட்டால் ரிஷப் பண்ட் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோர் ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய டி20 அணியில் நடு வரிசையில் இடம் பெறலாம் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
Story first published: Friday, December 15, 2023, 12:30 [IST]
Other articles published on Dec 15, 2023


Click it and Unblock the Notifications