“அவங்க கதை முடிஞ்சது”.. புஜாரா - ரகானேவின் சொதப்பல்.. கொந்தளித்து கவாஸ்கர் விட்ட பரபர வார்த்தைகள்!
ஜோஹனஸ்பர்க்: புஜாரா, ரகானே ஆகியோரின் விஷயத்தில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
Recommended Video
அவர்கள் எதற்காக அணியில் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு சென்றுவிட்டது ரகானே - புஜாராவின் நிலைமை.
ஒரு காலத்தில் இந்திய அணியின் தூணாக நின்று பல வெற்றிகளை தந்தவர்கள் என்ற காரணத்திற்காக தான் இன்னமும் அவர்கள் மீது தேர்வர்கள் குழு ஓரளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளது.

2வது டெஸ்ட்
ஆனால் அவர்களின் நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்து வருகின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரகானே - புஜாரா ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் நாங்கள் மாறவே மாட்டோம் என்பது போல புஜாரா மட்டைப்போட்டுவிட்டு வெளியேறினார். 33 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார். அதற்கு அடுத்த பந்திலேயே ரகானே கோல்டன் டக் அவுட்டாகி நடையை கட்டினார்.

கவாஸ்கரின் கருத்து
இந்நிலையில் இதுகுறித்து பேசிய கவாஸ்கர், இந்திய அணிக்குள் புஜாரா மற்றும் ரகானேவின் இடங்கள் குறித்து பிரச்சினை வலுத்து வருகிறது. ஆனால் இன்று விழுந்த 2 விக்கெட்டுகளின் மூலம், அவர்கள் இருவரும் தங்களது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வை பாதுகாத்துக்கொள்ள இன்னும் ஒரே ஒரு இன்னிங்ஸ் தான் பாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது 2வது இன்னிங்ஸ் தான் அவர்களின் வாழ்வா சாவா ஆட்டமாக இருக்கிறது.

கடைசி நம்பிக்கை
ரகானே - புஜாரா ஆகியோர் மோசமான ஃபார்ம் காரணமாக முதலில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் சேர்க்கப்படுவதாக இல்லை. ஆனால் அவர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த ராகுல் டிராவிட், சண்டைப் போட்டு அவர்களை இந்திய அணியுடன் அழைத்துச் சென்றார். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் இருவரின் ஃபார்ம் சரியாகிவிடாதா எனக் காத்திருந்தார். ஆனால் தற்போது டிராவிட்டே மனம் உடைந்து உட்கார்ந்துள்ளார் எனத் தெரிகிறது. இதனால் இனி யாராலும் காப்பாற்ற முடியாது.

போட்டிகள்
அவர்கள் இருவரின் இடத்திற்கு போட்டியாக இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹனுமா விஹாரி என இரண்டு வீரர்கள் காத்துள்ளனர். தங்களது ஃபார்மை நிரூபித்தும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என ஸ்ரேயாஸ் ஆதங்கத்தில் உள்ளார். ஒருவேளை 3வது டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டால், அதன் பின்னர் புஜாரா, ரகானேவால் அணிக்குள் நுழைவது கடினம்.


Click it and Unblock the Notifications