Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“மே ஐ கம் இன்” திடீர் என்ட்ரீ கொடுத்த மும்பை வீரர்.. ஒருநாள் அணியை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம்

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்வதில் புதிய வீரர் ஒருவர் என்ட்ரீ கொடுத்துள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி, அடுத்ததாக வரும் ஜனவரி 19ம் தேதி முதல் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

இதற்கான இந்திய வீரர்களை தேர்வு செய்வதில் தான் தற்போது பிசிசிஐ பொறுமை காத்து வருகிறது.

50 ஓவர் இந்திய அணி

50 ஓவர் இந்திய அணி

விஜய் ஹசாரே தொடர் முடிந்தவுடன் வீரர்களை தேர்வு செய்தால், சிறப்பாக இருக்கும் என பொறுமை காத்த பிசிசிஐ, தற்போது அந்த தொடர் முடிந்த பின்னரும் வீரர்களை அறிவிப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. இதற்கு காரணம் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி தான்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

மும்பையில் போலிஸ் இன்விடேசன் ஷீல்ட் என்ற உள்ளூர் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ், 152 பந்துகளில் 37 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என மொத்தம் 249 ரன்களை விளாசினார். இதனால் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 524 ரன்கள் குவித்து அசத்தியது.

சிக்கலான சூழல்

சிக்கலான சூழல்

சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தை பார்த்த இந்த தேர்வுக்குழு அதிகாரிகள் அவரை அணிக்குள் எடுத்தே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ஆகியோரும் அணியில் இடம்பிடிக்க போட்டிப்போட்டு வருகின்றனர்.

Recommended Video

Indian Under 19 Squad-ல் இடம் பிடித்த சாதாரண மளிகை கடைக்காரர் மகன்
கடும்போட்டி

கடும்போட்டி

தனக்கு கிடைத்த சில வாய்ப்புகளில் சதமடித்து அசத்தியுள்ளார் சூர்யகுமார் யாதவ். இதே போல ஸ்ரேயாஸ் ஐயரும் தற்போது முழு ஃபார்மில் விளையாடி வருவதால் இவர்கள் இருவருக்குள்ளும் தான் அதிக போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.

Story first published: Wednesday, December 29, 2021, 17:09 [IST]
Other articles published on Dec 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+