Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் என்ன நடக்குதுனே தெரியல..நம்பர் 1 பவுலர் இல்ல.. அரைசதம் அடித்தவரும் இல்ல-கம்பீர் சாடல்

மும்பை : இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மூன்று டி20 போட்டிகள் கொண்டிருந்த தொடரில் முதல் டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில் இரண்டாவது t20 போட்டியில் மழை குறிக்கிட்டது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனை அடுத்து தென்னாபிரிக்காவின் வெற்றிகளுக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் ஆக மாற்றி அமைக்கப்பட்டது.

Gautam gambhir

இதில் தென் ஆப்பிரிக்க அணி 13.5 ஓவர்களில் எல்லாம் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவன் தேர்வு செய்த விதம் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த கௌதம் கம்பீர் இந்திய அணியில் என்ன நடக்கிறது என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை.

இது குறித்து சூரியகுமார் யாதவும் இந்திய அணி நிர்வாகமும் தான் விளக்கம் அளிக்க வேண்டும். எதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் கடைசியாக விளையாடிய டி20 போட்டியில் பெங்களூருவில் அரை சதம் அடித்து இருந்தார். ஆனால் அடுத்த போட்டியில் அவர் இடம்பெறவில்லை. ஒருவேளை இந்திய அணி இடது கை, வலது கை பேட்ஸ்மேன்கள் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என முடிவெடுத்தார்களா என்று அவர்கள் தான் கூற வேண்டும்.

இல்லை ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏதேனும் காயமா என்பது குறித்தும் அணி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவி பிஷ்னாயும் நேற்று பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. எனவே, இது உங்களுடைய முக்கிய அணி கிடையாது என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்திருக்கலாம் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோர் ஏன் இடம்பெறவில்லை என்று ஏதேனும் செய்திகள் வந்ததா? கடந்த முறை ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தார். தொடர் நாயகன் விருதை ரவி பிஸ்னாய் வென்று இருந்தார். நான் ஏதேனும் தவற விட்டு விட்டேனா எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, December 13, 2023, 14:14 [IST]
Other articles published on Dec 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+