Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குளிரும் தர்மசாலாவில் இன்று நடக்கிறது அனல் பறக்கும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி

தர்மசாலா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளிடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவுடன் மூன்று டி20, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட 'மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா' கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வந்துள்ளது.

டோணி ரிட்டர்ன்

டோணி ரிட்டர்ன்

இவ்விரு அணிகளிடையிலான முதல் டி20 போட்டி ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள தர்மசாலா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய கேப்டன் மகேந்திர சிங் டோணி, மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கும் வாய்ப்பை இந்த டி20 போட்டி அமைத்துக் கொடுத்துள்ளது.

பேட்டிங் அபாரம்

பேட்டிங் அபாரம்

டி வில்லியர்ஸ், டுப்ளசிஸ், டேவிட் மில்லர், ஆம்லா, டுமினி போன்றோர் அதிரடி ஆட்டத்திற்காக உலக புகழ் பெற்ற வீரர்கள். பந்துவீச்சில், கைல் அபோட், கிறிஸ் மோரீஸ், சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் மற்றும் அல்பி மோர்கெல் ஆகியோர் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி அளிக்க காத்திருக்கின்றனர்.

தவான்

தவான்

இந்திய அணியைப் பொருத்த வரை, ஷிகர் தவான், நல்ல பார்மில் உள்ளார். தவானுடன் மற்றொரு தொடக்க வீரராக ரோஹித் சர்மா அல்லது ரஹானே ஆகிய இருவரில் யார் களமிறங்க போகிறார்கள் என்பது தெரியவில்லை.

கோஹ்லி, ரெய்னா

கோஹ்லி, ரெய்னா

விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா மற்றும் டோணி ஆகியோர் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங், அமித் மிஷ்ரா, அக்ஷர் பட்டேல் ஆகியோர் சுழற்பந்து வீச்சை பார்த்துக்கொள்ள உள்ளனர். தர்மசாலா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கும் சாதகமான களம் என்று தெரிகிறது.

இந்திய அணி

இந்திய அணி

டோணி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி, ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், விராட் கோஹ்லி, புவனேஷ்வர் குமார், அமித் மிஸ்ரா, அக்ஷர் படேல், அஜிங்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, மோஹித் ஷர்மா, ரோஹித் ஷர்மா மற்றும் ஸ்ரீநாத் அரவிந்த்.

தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா

பாப் டுபிளெசிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, ஃபர்ஹான் பெஹர்டியன், குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கைல் அபோட், மர்சன்ட் டி லங்கி, ஏபி டி வில்லியர்ஸ், ஜே.பி.டுமினி, இம்ரான் தாஹிர், எட்டி லீ, டேவிட் மில்லர், அல்பி மோர்கெல், கிறிஸ் மோரீஸ், ககிசோ ரபடா, கயா ஜோண்டோ.

போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Story first published: Friday, October 2, 2015, 12:59 [IST]
Other articles published on Oct 2, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+