Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி விரைவில் அறிவிப்பு.. யார் யாருக்கு வாய்ப்பு? முற்றிலும் இளம் படையை களமிறக்கும் பிசிசிஐ

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதற்கான இந்திய அணி நடப்பு வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது, இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித், கோலி, ராகுல், பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரில் யார் சிறப்பாக செயல்பட்டார்களோ அவர்களுக்கு இந்த தொடரில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரராக ஷிகர் தவான் அணியில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனியர்கள் இல்லாத நிலையில் ஷிகர் தவான் தான் கேப்டன் பொறுப்பை முன்பு எல்லாம் ஏற்றுள்ளார். அதே போல் ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷனுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

தினேஷ் கார்த்திக் ரிட்டர்ன்

தினேஷ் கார்த்திக் ரிட்டர்ன்

சூர்யகுமார் காயமடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக மும்பை அணியில் சிறப்பாக விளையாடும் திலக் வர்மா, ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று அனுபவ வீரர்கள் தினேஷ் கார்த்திக், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணியில் சேர்க்கப்பட உள்ளனர்.

இளம் வேகப்பந்துவீச்சாளர்கள்

இளம் வேகப்பந்துவீச்சாளர்கள்

இதே போன்று, சுழற்பந்துவீச்சு தரப்பில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு திரும்ப உள்ளனர். வேகப்பந்துவீச்சு தரப்பில் காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக், பஞ்சாப் அணியின் ஆர்ஷ்தீப் சிங், ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா, அனுபவ வீரர் புவனேஸ்வர் குமார், ஹர்சல் பட்டேல் ஆகியோரும் சேர்க்கப்பட உள்ளனர்.

போட்டி எப்போது?

போட்டி எப்போது?

பிரித்வி ஷா, வாசிங்டன் சுந்தர், ராகுல் திவாட்டியா, ஆகிய வீரர்களும் கூடுதலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறகிறது. இதே அணியில் சில மாற்றங்களுடன் இங்கிலாந்து தொடருக்கான அணியும் அறிவிக்கப்படும்

Story first published: Monday, May 16, 2022, 16:39 [IST]
Other articles published on May 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+