Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சி முகாமில் பங்கேற்காத ஹர்திக் பாண்ட்யா.. வாய்ப்பு கிடைத்தவுடன் இப்படியா?? காரணம் என்ன?

டெல்லி: இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு ஹர்திக் பாண்ட்யா வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகளில் மோதவுள்ளது.

இந்த போட்டிகள் டெல்லியில் வரும் ஜூன் 9ம் தேதி தொடங்கி ஜூன் 19ம் தேதி முடிவுடைகிறது.

 தென்னாப்பிரிக்க தொடர்

தென்னாப்பிரிக்க தொடர்

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து வீரர்களும் நேற்று டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு நேற்று முதல் பயிற்சி முகாம் தொடங்கியது. 2 மாத ஐபிஎல் உலகத்தில் இருந்த வீரர்கள், நேற்று தீவிர வலைப்பயிற்சி மூலம் சர்வதேச தரத்திற்கு மாறினர். உம்ரான், அர்ஷ்தீப் போன்றோர் படு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர்.

கலந்துக்கொள்ளாத பாண்ட்யா

கலந்துக்கொள்ளாத பாண்ட்யா

இந்நிலையில் நேற்று நடந்த பயிற்சி முகாமில் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்கவில்லை. கேப்டன் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் என அனைத்து முன்னணி வீரர்களுமே வந்தபோதும் ஹர்திக் பாண்ட்யா வரவில்லை.

அதிருப்தி

அதிருப்தி

உலகக்கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த பாண்ட்யா, தற்போது வாய்ப்பு கிடைத்தவுடன், இப்படி செய்வது நியாயமா? என ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இவரை போன்றே ஹர்ஷல் பட்டேல், யுவேந்திர சாஹல் ஆகியோரும் பங்கேற்கவில்லை.

காரணம் என்ன

காரணம் என்ன

நேற்று முதல் நாள் என்பதால், வீரர்கள் கலந்துக்கொள்ளாமல் போனாலும் பிரச்சினை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும் 4 நாட்கள் பயிற்சியாவது கண்டிப்பாக வேண்டும் என்பதற்காக வீரர்களின் விருப்பத்தின் பேரில் தான் நேற்று அனைத்து வீரர்களும் கலந்துக்கொண்டனர். ஹர்திக் பாண்ட்யா ஓய்வு எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வராமல் போய்விட்டதாக தெரிகிறது.

Story first published: Tuesday, June 7, 2022, 11:53 [IST]
Other articles published on Jun 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+