சீனியர் vs திறமை - யாருக்கு இடம் கிடைக்கும்.. உலகின் நம்பர் 1 வீரருக்கே இது தான் சார் கதி!
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதுமே திறமைக்கு வாய்ப்பு தரப்படுவதற்கு பதில் சீனியர் வீரர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வங்கதேசத்துக்கு எதிராக 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்தார்.
ஆனால் அடுத்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்னும் கொஞ்சம் முன்னால் போய் சொல்ல வேண்டும் என்றால் கருண் நாயர் என்ற வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த பிறகு ரஹானே அணிக்கு வருகிறார் என்பதற்காக நீக்கப்பட்டார்.

இப்படி பல சம்பவங்களை அடுக்கி செல்லலாம். இந்த நிலையில் டி20 போட்டிகளில் தற்போது திறம்பட பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து வருகிறார் ரவி பிஷ்னாய். தன்னுடைய இளம் வயதிலேயே தற்போது ஐசிசி t20 தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை அவர் பிடித்திருக்கிறார். ரஷித் கான், ஹசரங்கா, ஆதில் ரசித் போன்ற வீரர்கள் எல்லாம் பின் தள்ளி அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
இப்படி உலகின் நம்பர் ஒன் வீரராக இருந்தும் ரவி பிஸ்னாயால் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சீனியர் வீரர் ஜடேஜா அணிக்கு திரும்பிருக்கிறார். இதனால் அவரது தான் வாய்ப்பு வழங்கப்படும். இதே போன்று இரண்டாவது சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அணிக்கு திரும்பிருக்கிறார்.
பிளேயிங் லெவனில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும். இதனால் ரவி பிஷ்னால் பிளேயிங் லெவனில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைவிட பெரிய விஷயம் என்னவென்றால் வரும் டி 20 உலக கோப்பையிலும் இதே ஜடேஜா மற்றும் குல்லிப் யாதவ் ஆகியோருக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்.
நீங்கள் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தால் கூட சீனியர்கள் வந்தால் உங்களுக்கு அணியில் இடம் கிடைக்காது என்ற நிலைதான் தற்போது இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சீனியர், ஜூனியர் என்பதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு யார் தன்னுடைய திறமையை நிரூபித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications