Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சரித்திரத்தில் எழுதுங்கள்” டெஸ்ட் வரலாற்றில் இரு பெரும் கோட்டைகளை தகர்த்த இந்தியா - பாராட்டுக்கள்

செஞ்சூரியன்: யாராலும் அசைக்க கூட முடியாது எனக்கூறி வந்த 2 முக்கிய சரித்திரங்களை 2021ம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணி மாற்றி அமைத்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முடிவு பெற்றது. இதில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

கே.எல்.ராகுலின் சதம் மற்றும் முகமது ஷமியின் சாதனைகளுடன் முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றியை ருசித்துள்ளது.

சரித்திர வெற்றி

சரித்திர வெற்றி

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கோட்டையில் இந்திய அணி கொடியை நட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற செஞ்சூரியன் மைதானத்தில் இதுவரை 9 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மட்டுமே வெற்றி கண்டுள்ளன.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

எனினும் எந்தவொரு ஆசிய அணியாலும் இங்கு வெற்றி காண முடியவில்லை. இந்நிலையில் அந்த வரலாற்றை இன்று இந்திய அணி மாற்றியுள்ளது. அதுவும் 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருப்பதால் விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

காப்பா வெற்றி

காப்பா வெற்றி

இது ஒருபுறம் இருக்க 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இதே போன்ற சாதனையை இந்திய அணி படைத்தது. ஆஸ்திரேலியாவின் காப்பா மைதானத்தில் 1988ம் ஆண்டுக்கு பிறகு ஒருமுறை கூட டெஸ்ட் போட்டியில் தோற்றது கிடையாது என இருந்தது. ஆனால் 32 வருட இந்த சாதனையை இந்திய அணி இந்தாண்டு தகர்த்தது. அதுவும் 328 ரன்களை விரட்டி அசத்தியது.

ஓவலிலும் வெற்றி

ஓவலிலும் வெற்றி

இதே போல இங்கிலாந்து அணியை ஓவல் மைதானத்தில் 1971ம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட இந்திய அணி வீழ்த்தியதே இல்லை. ஆனால் 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த சாதனையை விராட் கோலி தலைமையிலான அணி தகர்த்தது. இதன் பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 30, 2021, 20:20 [IST]
Other articles published on Dec 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+