
முதல் டெஸ்ட் போட்டி
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்திய அணிக்கு இந்தாண்டு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி, இங்கிலாந்து அணியை புரட்டி எடுத்தது, நியூசிலாந்தை பழிவாங்கியது என தொடர் வெற்றிகள் தான் வந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் தென்னாப்பிரிக்காவில் தான் அவர்களுக்கு முக்கிய சவாலே உள்ளது.

சிக்கல்
தென்னாப்பிரிக்க மண்ணில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. இதற்கு அங்குள்ள பிட்ச்-ன் தன்மையை உணராமல் இந்திய அணி வீரர்காள் பேட்டிங் செய்வது தான். இதனையடுத்து அவர்களுக்கு பவுன்சர் பந்துகளை அதிகம் எதிர்கொள்ள ஸ்பெஷல் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

முக்கிய அட்வைஸ்
இந்நிலையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, முக்கிய அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். அதில், ஓப்பனிங் சரியாக அமையவில்லை என நினைக்கிறேன். ஓப்பனர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றால் ஒட்டுமொத்த அணியும் சொதப்பும். உதாரணத்திற்கு இங்கிலாந்து மண்ணில் ரோகித் - கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பாக ஆடினர். இதனால் இந்திய அணியுன் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை மயங்க் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி சேர்கின்றனர்.
Recommended Video

அடுத்தடுத்து பின்னடைவு
அவர்கள் இருவருமே பாக்ஸிங் டே டெஸ்டில் தான் அறிமுகமானார்கள். தற்போது மீண்டு அதே தொடரில் இணைகிறார்கள். கடந்த முறை தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற போது கோலி தான் (286 ரன்கள்) அதிக ரன்கள் அடித்திருந்தார். வேறு யாரும் சிறப்பாக ஆடவில்லை. இந்த முறையும் அப்படி தான் உள்ளது. இந்திய அணியில் தற்போது மிடில் ஆர்டரில் ஆட அக்ஷர் படேல், ஜடேஜா இல்லை. ஓப்பனிங்கில் ரோகித் இல்லை. ரகானே, புஜாரா சரியான ஃபார்மில் இல்லை. இது பெரும் பிரச்சினையாக இருக்கலாம் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications