Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனியர்களை ஓரம் கட்டிய இளம் வீரர்.. தென்னாப்பிரிக்க தொடரில் அதிர்ஷ்டம்.. டிராவிட்டின் மாஸ்டர் ப்ளான்

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய இளம் வீரர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை மதியம் செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது.

தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

ப்ளேயிங் 11 என்ன

ப்ளேயிங் 11 என்ன

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்குகிறார்கள். அதன்பிறகு விராட் கோலி, புஜாரா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோர் முதன்மை தேர்வாக உள்ளனர்.

நீடிக்கும் குழப்பம்

நீடிக்கும் குழப்பம்

ஆனால் அஜிங்கியா ரகானே - ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர் ஆகிய 4 வீரர்களும் தங்களுக்கான இடம் கிடைக்குமா என பரபரப்புடன் காணப்படுகின்றனர். 5வது இடத்திற்கு முழு நேர பேட்ஸ்மேனை களமிறக்கினாலும், 7வது இடத்திற்கு யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் நீடிக்கிறது.

இளம் வீரருக்கு அதிர்ஷ்டம்

இளம் வீரருக்கு அதிர்ஷ்டம்

இந்நிலையில் இளம் வீரர் ஷர்துல் தாக்கூருக்கு அணியின் ப்ளேயிங் 11ல் இடம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கடைசி நாள் பயிற்சி முகாமான இன்று ஷர்துலுக்கு தீவிர பேட்டிங் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் மேற்பார்வை செய்து அறிவுரைகளை கூறியுள்ளனர். இதனால் அவரின் இடம் உறுதியாகிவிட்டது. ஸ்ரேயாஸ் ஐயர், ரகானே, ஹனுமா விஹாரி போன்ற சிறப்பான பேட்ஸ்மேன்கள் உள்ள போதும், ஷர்துலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Recommended Video

IND vs SA: Why Duanne Olivier will be Threat | OneIndia Tamil
 என்ன காரணம்

என்ன காரணம்

தென்னாப்பிரிக்க களத்தில் வேகப்பந்துவீச்சு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு பேட்டிங்கும் முக்கியம். அணியின் மிடில் ஆர்டரில் கோலி, புஜாரா, ரகானே போன்றவர்கள் ஃபார்ம் சிறப்பாக இல்லாததால், அணியின் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்க வேண்டும். அதன்படி தான் ஷர்துல் தாக்கூர் பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கும் உதவுவார் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ராகுல் டிராவிட்டே விரைவில் அறிவிக்கலாம்.

Story first published: Saturday, December 25, 2021, 19:35 [IST]
Other articles published on Dec 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+