Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“போட்டி நடக்கனும்னா அது நடக்கனும்” பிசிசிஐ விதித்த புதிய நிபந்தனை.. உடனடியாக செய்த தென்னாப்பிரிக்கா

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னர் அந்நாட்டு அரசிடம் வாக்குறுதி ஒன்றை பிசிசிஐ பெற்றுள்ளது.

Recommended Video

BCCI விதித்த புதிய நிபந்தனை.. உடனடியாக செய்த South Africa | Oneindia Tamil

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதியன்று செஞ்சூரியனில் உள்ள மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணம் முதலில் ரத்து செய்யப்படவிருந்தது. மொத்தமாக 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட நெடுந்தொடர் தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பால் டி20 தொடர் மட்டும் ரத்து செய்யப்பட்டது. மேலும் டிசம்பர் 16ம் தேதி தொடங்கவிருந்த டெஸ்ட் தொடர் 26ம் தேதியன்று மாற்றப்பட்டது.

 பபுள் பாதுகாப்பு

பபுள் பாதுகாப்பு

இப்படி மிகப்பெரிய மாற்றங்களுடனும், தயக்கங்களுடனும் தான் இந்திய வீரர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது செஞ்சூரியனில் காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். அங்கு பயோ பபுள் பாதுகாப்புடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னாப்பிரிக்கா வாக்குறுதி

தென்னாப்பிரிக்கா வாக்குறுதி

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வாக்குறுதி ஒன்றை தரவேண்டும் என பிசிசிஐ நிபந்தனை விதித்துள்ளது. ஓமிக்ரான் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஒரு சில நகரங்களில் ஊரடங்குகளும் போடப்பட்டுள்ளது. ஒருவேளை விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டு, எல்லைப்பகுதிகள் மூடப்பட்டால் இந்திய வீரர்கள் எப்படி நாடு திரும்புவார்கள் என்ற கேள்வி இருந்தது.

தீர்வு கண்ட பிசிசிஐ

தீர்வு கண்ட பிசிசிஐ

அதற்கு தான் பிசிசிஐ தீர்வு கண்டுள்ளது. அதாவது, ஒருவேளை ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்தாலோ, இந்திய வீரர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலோ எப்போது வேண்டுமானாலும் நாட்டிற்கு திரும்பிக்கொள்ளலாம் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வாக்குறுதி அளித்துள்ளது. இதற்காக அரசாங்கத்திடம் இருந்தே வாக்குறுதி பெற்றுவிட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி மன்ஜ்ரா தெரிவித்துள்ளார். இதனால் இந்திய வீரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Story first published: Wednesday, December 22, 2021, 13:37 [IST]
Other articles published on Dec 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+