Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“உடல் முழுவதும் காயம்” டீன் எல்கருக்கு இந்திய பவுலர்கள் செய்த கொடுமை.. மனம் கலங்கிய தந்தை!

ஜோகன்ஸ்பெர்க்: இந்திய அணி பவுலர்கள் டீன் எல்கரை எப்படியெல்லாம் உடலில் தாக்கியுள்ளனர் என அவரது தந்தை மனம் உருகி கூறியுள்ளார்.

2வது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணி போராடியது. ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போட்டார் டீன் எல்கர்.

தென்னாப்பிரிக்க அணியின் எல்லை சாமியை போன்று நிலைத்து நின்று விளையாடிய டீன் எல்கர் 96 ரன்கள் விளாசி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

2வது டெஸ்ட்

2வது டெஸ்ட்

2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டரை மெதுவாக சரிய வைத்தனர். ஆனால் கேப்டன் டீன் எல்கர் நிலைத்து நின்று ஆடியதால் அந்த அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. எல்கரின் விக்கெட்டுகளை எடுக்க இந்திய பவுலர்கள் பல்வேறு பந்துகளை உடலுக்கு வீசினர். ஆனால் அத்தனை அடிகளையும் தாங்கிய அவர் 240 ரன்கள் இலக்கை அடைய விராட் உதவிப் புரிந்தார்.

எல்கர் தந்தை சோகம்

எல்கர் தந்தை சோகம்

இந்நிலையில் தனது மகனுக்கு இந்திய பவுலர்கள் கொடுத்த பாதிப்பு குறித்து பேசிய ரிச்சர்ட் எல்கர், " எனது மகன் 3ம் நாள் ஆட்டத்தின் முடிவில் என்னிடம் ஒன்று கூறினார். அதில் நான் ஆட்டத்தின் கடைசி வரை களத்தில் நின்றிருப்பேன். இந்திய வீரர்கள் என்னை அவுட்டாக்க வேண்டும் என்றால், எனது உடலில் இருந்து ஏதேனும் ஒரு பாகத்தை கழட்டி எறிய வேண்டும். அப்படி செய்தாலும், என்னை அவுட்டாக்க முடியாது என சபதம் எடுத்தார்.

தாயின் சிரமம்

தாயின் சிரமம்

எல்கர் பந்துகளால் பலத்தை அடி வாங்கியதை கண்டு அவரின் தாயார் மனம் கலங்கினார். ஆனால் எல்கருக்கு அது புதிதல்ல, பள்ளி பருவத்தில் இருந்தே ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டும் என்பதற்காக பல வலிகளை பொறுத்துக் கொண்டுள்ளார். எப்போதெல்லாம் அவர் பல அடிகளை வாங்குகிறாரா, அப்போதெல்லாம் அவர் சாதித்தது தான் உண்டு என எல்கரின் தந்தை கூறியுள்ளார்.

 போட்டி நிலவரம்

போட்டி நிலவரம்

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1 -1 என சமநிலையில் உள்ளன. வெற்றியாளரை தீர்மானிக்கக்கூடிய கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 11ம் தேதி தொடங்கவுள்ளது. 2வது டெஸ்டினை போன்றே 3வது டெஸ்டிலும் வெற்றி பெறுவோம் என கேப்டன் டீன் எல்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 8, 2022, 16:46 [IST]
Other articles published on Jan 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+