Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்டில் மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா உருவ தங்க நாணயத்தில் டாஸ்

கொல்கத்தா: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் போடுவதற்காக, மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட சிறப்புத் தங்க நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமைதி மற்றும் அகிம்சையின் உலகளாவிய அடையாளங்களாக விளங்கும் இருபெரும் தலைவர்களைப் போற்றும் இந்த முயற்சியை கங்குலி முன்னெடுத்துள்ளார்.

நவம்பர் 14 அன்று கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தச் சிறப்பு நாணயம் பயன்படுத்தப்படும். இதுகுறித்து வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவர் சௌரவ் கங்குலி கூறுகையில், "இந்தத் தொடருக்காகவே இந்த நாணயம் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒருபுறம் மகாத்மா காந்தியின் உருவமும், மறுபுறம் நெல்சன் மண்டேலாவின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது அமைதி, சுதந்திரம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் பறைசாற்றும்" என்றார்.

India vs South Africa Test Mahatma Gandhi - Nelson Mandela Gold Coin for Toss at IND vs SA first Test at Kolkata
Photo Credit: Gemini Imagen - AI Image

இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர், 'சுதந்திரக் கோப்பை' (Freedom Trophy) என்ற பெயரில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது காந்தி மற்றும் மண்டேலாவின் சுதந்திரப் போராட்ட பங்களிப்பைக் கௌரவிப்பதற்காக இவ்வாறு இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு சுதந்திரக் கோப்பை என பெயரிடப்பட்டுள்ளது. அதன் நீட்சியாகவே இந்தச் சிறப்பு நாணயம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு:

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட் திரும்புவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் கிட்டத்தட்ட விற்றுத் தீர்ந்துவிட்டன. இதுவரை 96,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக வங்காள கிரிக்கெட் அமைப்பின் பொருளாளர் சஞ்சய் தாஸ் கூறியுள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, போட்டி நடைபெறும் பகுதியில் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டிக்கு முன்னதாக, நவம்பர் 13 அன்று ஜக்மோகன் டால்மியா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சிறப்புரையாற்றுகிறார்.

கேப்டன் சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய தொடரை முடித்துக்கொண்டு கொல்கத்தா வந்தடைந்தது. கம்பீர் மற்றும் கங்குலி ஆகியோர் ஈடன் கார்டன்ஸ் ஆடுகளத்தை ஆய்வு செய்தனர். "இது ஒரு நல்ல ஆடுகளமாகத் தெரிகிறது" என்று கங்குலி குறிப்பிட்டார்.

Story first published: Tuesday, November 11, 2025, 14:20 [IST]
Other articles published on Nov 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+