Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எடுத்துட்டு வாங்கடா அத”.. பழைய சாட்டையை கையில் எடுத்த ராகுல் டிராவிட்..முதல் டெஸ்டுக்கு படு தீவிரம்

செஞ்சூரியன்: இந்திய அணியின் பயிற்சிக்காக ராகுல் டிராவிட் தனது பழைய ஃபார்முலா ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்குகிறது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு இது மிக முக்கிய தொடராகும். ஏனென்றால் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் முதல் முறையாக அயல்நாட்டு மண்ணில் இந்திய அணி எப்படி விளையாடுகிறது என்பது தெரியும். இதே போல விராட் கோலி தனது கேப்டன்சி திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனையடுத்து படு தீவிரமாக வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ராகுல் டிராவிட் பயிற்சி

ராகுல் டிராவிட் பயிற்சி

இந்நிலையில் செஞ்சூரியன் பிட்ச்-ஐ கையாள்வதற்காக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது பழைய ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளார். அதாவது நேற்று மாலை இந்திய குழு அனைவரையும் திடீரென மைதானத்திற்கு அழைத்த ராகுல் டிராவிட் 2 வெள்ளை நிற போர்ட்களை எடுத்து வரும்படி கூறியுள்ளார்.

பழைய நாட்கள்

பழைய நாட்கள்

அதில் அடுத்த 5 நாட்களுக்கு இந்திய அணி மேற்கொள்ளப்போகும் வியூகம், ப்ளான் ஏ, ப்ளான் பி என அனைத்து திட்டங்களையும் விளக்கியுள்ளார். மேலும் வீரர்களிடமும் ஆலோசனைகள் கேட்கப்பட்டுள்ளது. இது போன்ற பயிற்சி "ஓபன் செஷன்" வகுப்பு முறைகளை ராகுல் டிராவிட் விளையாடிய ஆட்டங்களின் போது தான் இருந்தது.

Recommended Video

Rahul Dravid works on Virat Kohli's batting as Team India sweat hard ahead of SA | Oneindia Tamil
தென்னாபிரிக்க கோச்

தென்னாபிரிக்க கோச்

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிற்ஸ்டனுக்கும் இதே போன்ற வகுப்பு முறைகள் மிகவும் பிடித்தமான ஒன்று. தென்னாப்பிரிக்க அணிக்கு அவர் பயிற்சி அளிக்கும் போது இதே போன்று போர்ட்களை கொண்டு வரச்சொல்லி வியூகங்களை வகுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 25, 2021, 10:12 [IST]
Other articles published on Dec 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+