முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷர்துல்.. கோலியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. காத்திருக்கும் ஆப்பு!
செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டிற்கு ஷர்துல் தாக்கூர் களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இரு அணிகளும் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மழையினால் 2வது நாள் ஆட்டம் முழுவதும் ரத்து செய்யபப்பட்டதால் தற்போது விறுவிறுப்பை கட்டத்தை அடைந்துள்ளது.
டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுலின் சதம் பெரிய ஸ்கோரை அடிப்பதற்கு பெரும் உதவியாக இருந்தது.

முதல் டெஸ்ட் போட்டி
இதன் பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய பவுலர்களின் வேகத்தை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் இந்திய அணி தற்போது 130 ரன்கள் முன்னிலை பெற்று 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இந்த முறையும் கே.எல்.ராகுல் நிலையாக நின்று ரன்களை சேர்த்து வருகிறார்.

ஆச்சரியம்
இந்நிலையில் 2வது இன்னிங்ஸின் போது ரசிகர்களுக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் வெளியேறியவுடன் முதல் விக்கெட்டிற்கு புஜாரா களமிறங்கவேண்டும். அப்படி இல்லையென்றால் கேப்டன் விராட் கோலி களமிறங்குவார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூரை களமிறக்கினார் விராட் கோலி. இதனை தென்னாப்பிரிக்க வீரர்களே எதிர்பார்க்கவில்லை.

என்ன காரணம்
ஷர்துலை களமிறக்கியதற்கு பின்னர் டிராவிட் மற்றும் கோலி ஆகியோர் சூப்பர் ப்ளானை வைத்துள்ளனர். இப்போட்டி 4ம் நாளை எட்டிவிட்டபோதும் தற்போது தான் 2வது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது. இன்று முழுவதும் இந்திய அணி விளையாடி 400+ என பெரிய ஸ்கோரை அடித்துவிடலாம். ஆனால் நாளை ஒருநாளுக்குள் தென்னாப்பிரிக்க அணியால் அதனை எட்ட முடியாது. இதனால் டிரா செய்ய தடுப்பாட்டம் ஆடினால் ஒரே நாளுக்குள் 10 விக்கெட்களை எடுப்பதும் இந்தியாவுக்கு சிரமமாகிவிடும்.

கோலியின் மாஸ்டர் ப்ளான்
இதனை மனதில் யோசித்த விராட் கோலி, ஷர்துல் தாக்கூரை முன்கூட்டியே களமிறக்கி அதிரடியாக விளையாட அறிவுறுத்தியுள்ளார். அவர் மட்டும் சிறப்பாக விளையாடினால் இன்று மதியத்திற்குள் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடித்து தென்னாப்பிரிக்க்காவை பேட்டிங்கிற்கு அழைக்கும். பின்னர் ஒன்றரை நாளில் 10 விக்கெட்களை கைப்பற்றிவிடலாம். ஷர்துல் ஏற்கனவே இங்கிலாந்து தொடரில் அரைசதம் விளாசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications