Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அந்த ஒரு வார்த்தை” பிசிசிஐ-யிடம் இருந்து வந்த அவசர கடிதம்.. சங்கடத்தில் ஆழ்ந்த புஜாரா..என்ன ஆனது

செஞ்சூரியன்: இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர் சட்டீஸ்வர் புஜாரவுக்கு மேலிடத்தில் இருந்து அவசர கடிதம் ஒன்று சென்றுள்ளது.

Recommended Video

IND vs SA Pujara இனி ஆட்டத்தை மாற்ற வேண்டும் ! கடைசி வாய்ப்பு - Pravin Amre | Oneindia Tamil

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதியன்று தொடங்கவுள்ளது.

செஞ்சூரியனில் நடைபெறும் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்திய அணியை பொறுத்தவரை அஜிங்கியா ரகானே - சட்டீஸ்வர் புஜாரா ஆகிய இருவருக்கும் இந்த தொடர் வாழ்வா? சாவா? போட்டிகளாக இருக்கவுள்ளது. இதில் ரகானேவுக்கு ப்ளேயிங் 11ல் இடம் கிடைப்பது சந்தேகமாக இருந்தாலும், புஜாராவுக்கான இடம் உறுதியாகியுள்ளது. ரோகித் சர்மா விலகியுள்ளதால், புஜாரா பொறுப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

புஜாரா சரிவு

புஜாரா சரிவு

புஜாரா கடந்த 40 இன்னிங்ஸுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் உள்ளார். அரைசதங்களும் பெரியளவில் தொடர்ச்சியாக அடிப்பதில்லை. சொற்ப ரன்கள், குறைந்த டக் அவுட்களே அதிகரித்து வருகின்றன. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பெரிய இன்னிங்ஸை அடித்தால் மட்டுமே அவருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும்.

திடீர் கடிதம்

திடீர் கடிதம்

இந்நிலையில் சட்டீஸ்வர் புஜாராவுக்கு இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து முக்கிய கடிதம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டி புஜாராவுக்கு முக்கியம் எனவும், முழு திறணையும் காட்டியே தீர வேண்டும் என உத்தரவு வந்திருப்பதாக தெரிகிறது. ரோகித் சர்மா அணிக்குள் இல்லாததால் இந்த போட்டியில் அவர் தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த புஜாரா, கடும் சங்கடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் வீரர் பதில்

முன்னாள் வீரர் பதில்

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் பிரவீன் அம்ரே, புஜாரா இதுவரை 6,589 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட் விளாசியுள்ளார். இவை ஒன்றும் சாதாரணமாக வந்ததல்ல, பல்வேறு இக்கட்டான சூழல்களில் அணியை காப்பாற்றி இந்த ரெக்கார்டை வைத்துள்ளார். அவர் மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டும் என பிசிசிஐ கடிதம் அனுப்பியுள்ளது எனக் கூறியுள்ளார்.

Story first published: Friday, December 24, 2021, 18:06 [IST]
Other articles published on Dec 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+