Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் சாதனையை முறியடிக்கும் ரிஷப் பண்ட்.. நீண்ட வருட ரெக்கார்ட் மாறப்போகிறது.. நிறைவேறுமா?

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்க தொடரில் எம்.எஸ்.தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதன் முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதியன்று செஞ்சூரியனில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடைபெறவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இதற்காக இந்திய அணியின் ப்ளேயிங் 11- ஐ தேர்வு செய்யும் பணிகளில் -பிசிசிஐ தேர்வுக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக சீனியர் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்பதால், இந்த முறை வரலாற்றை மாற்றி அமைக்க பிசிசிஐ மிகவும் கவனமாக உள்ளது.

தோனி ரெக்கார்ட்

தோனி ரெக்கார்ட்

அனைவரின் கவனமும் போட்டியின் மீது இருக்க, ரிஷப் பண்ட் மட்டும் தனி ரூட்டில் சாதனை படைக்க காத்திருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தன்னுடை வைத்துள்ளார். அவர் 36 டெஸ்ட்களில்100 பேரை வீழ்த்தி அந்த சாதனையை படைத்தார்.

பண்ட்-ன் பெருமை

பண்ட்-ன் பெருமை

இந்நிலையில் இளம் வீரர் ரிஷப் பண்ட், 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 89 கேட்ச் + 8 ஸ்டெம்பிங் செய்து மொத்தம் 97 பேரை வீழ்த்திய விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார்.

இவர் அடுத்ததாக தென்னிப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 பேரை வீழ்த்தினால் குறைந்த டெஸ்டில், 100 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துவிடுவார். இதனால் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

Recommended Video

From CSK, Gabba Win To Neeraj's Gold- Indian Sports Moments 2021 | OneIndia Tamil
புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர். 26ம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் 21 வெற்றிகளை பெற்றுள்ளது. 3 போட்டிகள் டிரா, 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது. இந்திய அணி இதுவரை 2 டெஸ்ட்களில் விளையாடி இரண்டிலுமே தோல்வியை சந்தித்துள்ளது.

Story first published: Thursday, December 23, 2021, 18:57 [IST]
Other articles published on Dec 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+