Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நூழிலையில் போயிடுச்சே” தோனியின் முக்கிய ரெக்கார்டை தவறவிட்ட ரிஷப் பண்ட்.. எதிர்பார்ப்புகள் உடைந்தது

செஞ்சூரியன்: தோனியின் கேட்ச் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட், அவரின் முக்கிய சாதனை ஒன்றை படைக்க நூழிலையில் தவறவிட்டார்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 24 வயதில் தோனியின் நீண்ட கால ரெக்கார்டை உடைத்தார்.

தோனியின் சாதனை

தோனியின் சாதனை

அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்களை எடுத்தவர்கள் பட்டியலில் தோனி 3வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் தோனி 90 டெஸ்ட்களில் விளையாடி 294 முறை விக்கெட் எடுத்துள்ளார். மேலும் அதிவேகமாக 100 விக்கெட்களை (36 டெஸ்ட் ) சாய்த்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்று இருந்தார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

ஆனால் அந்த சாதனையை ரிஷப் பண்ட் நேற்று தகர்த்தார். 26 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரிஷப் பண்ட் நேற்று தனது 100வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதனால் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மற்றொரு வாய்ப்பு

மற்றொரு வாய்ப்பு

இந்நிலையில் அந்த சாதனையை பார்த்துக்கொண்டே தோனியின் மற்றொரு முக்கிய சாதனையை தகர்க்க பண்ட் தவறிவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 749 ரன்களை விளாசி தோனி சாதனை படைத்திருந்தார். அதனை தகர்க்க தென்னாப்பிரிக்க தொடரில் ரிஷப் பண்ட்-க்கு இன்று வாய்ப்பு ஏற்பட்டது.

 தவறிய சாதனை

தவறிய சாதனை

அவர் 2021ம் ஆண்டில் மட்டும் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 748 ரன்களை குவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரே ஒரு ரன்னை மட்டும் கூடுதலாக அடித்திருந்தால், தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்திருக்கலாம். எனினும் வரும் காலங்களில் தோனியின் மற்ற சாதனைகளை அவர் படைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Story first published: Wednesday, December 29, 2021, 21:26 [IST]
Other articles published on Dec 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+