
இந்திய அணிக்கு சிரமம்
தென்னாப்பிரிக்க களத்தை பொறுத்தவரையில் பேட்ஸ்மேன்களுக்கு சிரமமானதாக இருக்கும். அதுவும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சிரமம் இருக்கும். ஏனென்றால் இந்திய வீரர்கள் ஸ்பின்னர்களுக்கு ஏற்ற களங்களில் அதிகம் ஆடி பழகியவர்கள். தென்னாப்பிரிக்கா போன்ற வேகப்பந்துவீச்சு களங்களில் சிரமப்படுவதை நாம் பலமுறை பார்த்துள்ளோம். அங்கு சுமார் 150 கிமீ வேகத்தில் தொடர்ச்சியாக பந்துகள் வரும்.

சச்சினின் அட்வைஸ்
இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதனை எப்படி கையாள வேண்டும் என முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், என்னைப் பொறுத்தவரையில் பேட்ஸ்மேனுக்கு ஃப்ரெண்ட் ஃபூட் தான் முக்கியம். அந்த டிஃபன்ஸ் தான் தென்னாப்பிரிக்காவில் முக்கியமான விஷயமாகும். ஆனால் முதல் 25 ஓவர்களுக்கு அதை செய்வது மிகக்கடினமாகும்.

காரணம் என்ன
ஃப்ரெண்ட் ஃபூட் டிபன்ஸ் செய்தால், பேட்ஸ்மேனின் கைகள் உடலை விட்டு நீண்டு செல்லாது. அதுதான் நமக்கு பலம். உடலை விட்டு பேட்ஸ்மேனின் கை நீண்டு செல்லும் போது தான் தனது நிதானத்தை இழக்கிறார். இதனால் நல்ல ஸ்விங் பந்துகள் வரும் போது பேட்டில் எட்ஜாகி கேட்ச் ஆகிறது.
Recommended Video

ஓப்பனிங் வீரர்கள்
ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஜோடிக்கு ஓப்பனிங்கில் கடும் சிரமங்கள் இருந்து வந்தது. ஆனால் அவர்கள் அதனை ப்ரெண்ட் ஃபூட் மூலம் தான் சரி செய்தனர். இதனால் தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதனை செய்தாலே இந்தியா அதிக ஸ்கோரை எட்டலாம் என சச்சின் அட்வைஸ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications