Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA : இந்திய அணிக்கு ஆப்பு வைத்த ஐசிசி.. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு இவர்தான் அம்பயர்

கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது

இந்த நிலையில், இந்திய அணிக்கு ஒத்துவராத அம்பயரை அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் நியமித்து இருக்கிறது ஐசிசி. அவர் வேறு யாருமல்ல ரிச்சர்ட் கெட்டில்பரோ. 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கூட அவரே இரு அம்பயர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

ரிச்சர்ட் கெட்டில்பரோ இந்திய அணி ஆடும் முக்கிய போட்டிகளில் அம்பயராக வந்தால், இந்தியா அந்தப் போட்டியில் தோற்று விடும் என்றார் கருத்து கடந்த சில ஆண்டுகளாக நிலவி வருகிறது. 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கூட அதுதான் நடந்தது.

INDIA vs SOUTH AFRICA Test Series gets Richard Kettleborough as umpire for both the matches

இதற்கு முன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2014 டி20 உலகக்கோப்பை, 2015 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, 2016 டி20 உலகக்கோப்பை, 2017 சாம்பியன்ஸ் ட்ராபி என அனைத்து நாக் அவுட் போட்டிகளிலும் அவர் வந்தாலே இந்தியா தோற்று இருக்கிறது. இத்தனைக்கும் அவர் இந்தியாவுக்கு எதிராக, தவறான தீர்ப்புகளை அதிகம் வழங்கியதில்லை.

சில சமயம் இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக கூட விமர்சனம் எழுந்துள்ளது. அப்படி இருந்தும் அவர் இந்திய அணி ஆடும் போட்டிகளில் அம்பயராக வந்தால் இந்தியா தோற்கும் என்ற பிம்பத்தை இதுவரை மாற்ற முடியவில்லை. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலாவது அந்த நிலை மாறுகிறதா என பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள தென்னாப்பிரிக்க அணி :

டெம்பா பாவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ராம், வியான் முல்டர், லுங்கி என்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரின்னே.

Story first published: Tuesday, December 5, 2023, 14:05 [IST]
Other articles published on Dec 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+