For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA டெஸ்ட் தொடர்.. இந்த மாதிரி நல்ல வாய்ப்பு அமையாது.. இதை செய்தால் வெற்றி நிச்சயம்- கவாஸ்கர்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி இதுவரை இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் மட்டும் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட இந்தியா வென்றதில்லை.

இலங்கை போன்ற அணிகள் கூட தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது. ஆனால் இந்தியாவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

India vs south africa test series - suni Gavaskar asks team india to score 500 runs

இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெறுமா என்பது குறித்து கவாஸ்கர் பேசியதை தற்போது பார்க்கலாம். தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவதற்கு இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் இரண்டு தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. இதன் மூலம் இந்திய வீரர்கள் சரியாக விளையாடினால் நிச்சயமாக முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் அடிக்க முடியும்.

பந்து புதிதாக இருக்கும் போது கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆடுகளத்தில் பவுன்சும் நன்றாக இருக்கும்.ஆனால் இதையெல்லாம் சமாளித்து ஆடுவது தான் டெஸ்ட் கிரிக்கெட். உங்களுக்கு ஐந்து நாட்கள் இருக்கிறது. இதனை பயன்படுத்தி நன்றாக பேட்டிங் செய்யுங்கள். 300லிருந்து 500 ரன்கள் நீங்கள் எடுத்தாலே பவுலர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும்.இதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் இரண்டு இன்னிங்ஸையும் நாம் எளிதாக சுருட்டி விடலாம்.

இந்திய அணிக்கு 2018 ஆம் ஆண்டு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. அந்தத் தொடரை இந்தியா வென்று இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதைப் போன்று 2021 ஆம் ஆண்டு இந்திய அணியில் வீரர்கள் இருந்தாலும் அது அவ்வளவு சிறந்த அணியாக இல்லை என்று கவாஸ்கர் கூறியிருக்கிறார்.கில், ரோகித் சர்மா, விராட் கோலி,ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா போன்ற வீரர்கள் எல்லாம் நாளை மறுநாளிலிருந்து டெஸ்ட் போட்டிக்காக கடும் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 18, 2023, 7:00 [IST]
Other articles published on Dec 18, 2023
English summary
India vs south africa test series - suni Gavaskar asks team india to score 500 runs IND vs SA டெஸ்ட் தொடர்.. இந்த மாதிரி நல்ல வாய்ப்பு அமையாது.. இதை செய்தால் வெற்றி நிச்சயம்- கவாஸ்கர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+