Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்திய அணிக்கு கண்டம்”.. முதல் டெஸ்டிலேயே பேட்ஸ்மேன்களுக்கு காத்திருக்கும் சவால்.. வெல்ல முடியுமா?

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு பெரும் கண்டம் காத்திருக்கிறது .

Recommended Video

South Africa தொடரின் முதல் Test போட்டியில் India-க்கு காத்திருக்கும் சவால்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதி நடைபெறுகிறது.

செஞ்சூரியனில் நடைபெறவிருக்கும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

டெஸ்ட் தொடர்களை பொறுத்தவரை, தென்னாப்பிரிக்க அணியை அதன் மண்ணில் இதுவரை இந்தியா வீழ்த்தியதே இல்லை. இந்த முறை அதனை நிறைவேற்றி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் பலமான அணி உருவாக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கும் டெஸ்ட் அணியின் கேப்டனாக தன்னை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது.

இந்திய அணிக்கு கண்டம்

இந்திய அணிக்கு கண்டம்

இந்நிலையில் இந்திய அணியின் கனவுக்கு பெரும் கண்டத்தை கொடுத்துள்ளது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். போட்டி நடைபெறும் செஞ்சூரியன் மைதானத்தில் வீரர்கள் பேட்டிங் செய்வது சாதாரண காரியம் அல்ல. பிட்ச்-ல் அதிகப்படியான புற்கள் நிறைந்துள்ளன. இதனால் பந்து ஏகபோகத்திற்கு ஸ்விங் இருக்கும்.

கோச் விளக்கம்

கோச் விளக்கம்

நீண்ட நேரம் தாக்கு பிடித்து நிற்கும் பட்சத்தில் தான் இதுபோன்ற களங்களில் வீரர்களால் சோபிக்க முடியும். எனவே இந்திய வீரர்களுக்கு ஸ்பெஷல் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர், இந்திய வீரர்களுக்கு செண்டர் விக்கெட் பயிற்சி கொடுத்து வருகிறோம். ஏனென்றால் அதுபோன்ற பவுலிங்கை அவர்களால் எளிதில் சமாளிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

வெற்றி சதவீதங்கள்

வெற்றி சதவீதங்கள்

செஞ்சூரியன் மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணி ராஜா என்றே கூறலாம். இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளை அங்கு ஆடியுள்ள அந்த அணி, 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, 3 போட்டிகளை சமனும் செய்துள்ளது. 2 முறை தான் தோல்வியை சந்தித்துள்ளது. அதுவும் கடைசியாக அங்கு 2014ம் ஆண்டு சந்தித்தது ஆகும். இந்திய அணியை பொறுத்தவரையில் இங்கு 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலுமே தோல்வியை சந்தித்துள்ளது.

Story first published: Monday, December 20, 2021, 16:38 [IST]
Other articles published on Dec 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+