For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நஷ்டம் ஒன்றும் பெரிதல்ல” பிசிசிஐ-காக தென்னாப்பிரிக்கா எடுத்த துணிச்சல் முடிவு..ரசிகர்கள் பாராட்டு

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து கிடைத்துள்ள புதிய அப்டேட், இந்திய அணியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

South Africa தொடரின் முதல் Test போட்டியில் India-க்கு காத்திருக்கும் சவால்

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதியன்று செஞ்சூரியனில் உள்ள மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணம் முதலில் ரத்து செய்யப்படவிருந்தது. மொத்தமாக 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட நெடுந்தொடர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு வேகமாக பரவி வரும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பால் டி20 தொடர் மட்டும் ரத்து செய்யப்பட்டது. மேலும் டிசம்பர் 16ம் தேதி தொடங்கவிருந்த டெஸ்ட் தொடர் 26ம் தேதியன்று மாற்றப்பட்டது.

புதிய பிரச்சினை

புதிய பிரச்சினை

இப்படி மிகப்பெரிய மாற்றங்களுடனும், தயக்கங்களுடனும் தான் இந்திய வீரர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது செஞ்சூரினில் காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் தொடரில் கொரோனா தனது வேலையை மோசமான முறையில் செய்துவிட்டது. எனவே அதே பிரச்சினை இங்கும் வந்துவிடக்கூடாது என்பதில் பிசிசிஐ தெளிவாக உள்ளது.

தென்னாப்பிரிககாவின் பெருந்தன்மை

தென்னாப்பிரிககாவின் பெருந்தன்மை

இந்நிலையில் பிசிசிஐ-க்கு ஒத்துழைப்பு தருவதற்காக நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு முடிவை எடுத்துள்ளது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். பொருளாதார சிக்கலில் உள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், இந்தியாவுடனான தொடரின் மூலம் வரும் வருமானத்தை அதிகம் நம்பியுள்ளது. குறிப்பாக பார்வையாளர்களுக்கான டிக்கெட் விற்பனை ஏகபோகத்திற்கு இருக்கும்.

துணிச்சல் முடிவு

துணிச்சல் முடிவு

ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்படபோவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ அதிகாரிகள், இந்த விவகாரத்தில் கோரிக்கை வைத்ததாகவும் அதனை ஏற்று பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடைபெறும் என உறுதியளித்துள்ளதாக தெரிகிறது. குறைந்தபட்சமாக 2000 பேருக்கு மட்டும் அனுமதி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க வாரியத்தின் நஷ்டத்திற்கு பிசிசிஐ வரும் காலத்தில் ஏதேனும் உதவி செய்யும் எனத் தெரிகிறது.

Story first published: Monday, December 20, 2021, 16:31 [IST]
Other articles published on Dec 20, 2021
English summary
Spectators Banned for India - south africa Boxing day test, to play South Africa in empty stadium
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+