Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரகானேவா? ஸ்ரேயாஸ் ஐயரா?.. பதிலளித்த ராகுல் டிராவிட்.. முதல் டெஸ்டுக்கான இந்திய ப்ளேயிங் 11 என்ன?

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் ப்ளேயிங் 11 குறித்து ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார்.

நீண்ட பிரச்சினைகளுக்கு பிறகு இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது.

ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக இந்த போட்டி முழுவதும் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 தான் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சீனியர் வீரர் சட்டீஸ்வர் புஜாராவுக்கு வாய்ப்பு உறுதியான போதும் ரகானேவின் நிலை தான் கேள்விக்குறியாக உள்ளது. ஒரே ஒரு இடத்திற்காக ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி என போட்டிப்போட்டு வருகின்றனர்.

ராகுல் கொடுத்த அப்டேட்

ராகுல் கொடுத்த அப்டேட்

அவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்பது குறித்து நேற்று துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் பேசியிருந்தார். அதில், இந்திய அணியின் மிக முக்கிய வீரர் ரகானே தான். பல்வேறு போட்டிகளில் வெற்றி தேடிக்கொடுத்துள்ளார். அவரை வெளியேற்றுவது சரியாக இருக்காது என்பது போல கூறியிருந்தார்.

பதிலளிக்கும் டிராவிட்

பதிலளிக்கும் டிராவிட்

இந்நிலையில் ரகானேவுக்கு இடம் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து ராகுல் டிராவிட் இன்று அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவுள்ளார். இன்று பிற்பகல் 4 மணி அளவில் ராகுல் டிராவிட் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அதில் இந்திய அணியின் திட்டம், ப்ளேயிங் 11 ஆகியவை குறித்து முழு விளக்கம் தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தெரிவிக்கும் அப்டேட்டை மைக்கேல் தமிழில் உடனடியாக நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ரகானே - ஸ்ரேயாஸ் ஐயரை தவிர்த்து ப்ளேயிங் 11ல் இடம்பெறக்கூடிய மற்ற வீரர்களின் தகவல் வெளியாகிவிட்டன. அதன்படி கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரகானே/ ஸ்ரேயாஸ், ரிஷப் பண்ட், அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ்

Recommended Video

South Africa Captain Dean Elgar's Ultimate Praise For India Star Ahead Of 1st Test | Oneindia Tamil
 கடினமான பிட்ச்

கடினமான பிட்ச்

ஏற்கனவே இந்த சுற்றுப்பயணம் குறித்து பேசியிருந்த டிராவிட், உலகின் மற்ற களங்களை விட தென்னாப்பிரிக்க களம் வித்தியாசமானதாக இருக்கும். இங்கு பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருக்கும். ஆனால் அந்நாட்டு வீரர்கள் பலமாக இருப்பார்கள் என்பதால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். கோலி மீது முழு நம்பிக்கை உள்ளது என்பது போல பேசியுள்ளார்.

Story first published: Saturday, December 25, 2021, 13:05 [IST]
Other articles published on Dec 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+