Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்ன மனுஷன்யா”.. விராட் கோலிக்காக குரல் கொடுத்த ராகுல் டிராவிட்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி - விவரம்

செஞ்சூரியன்: விராட் கோலியை தட்டிக்கொடுத்து ராகுல் டிராவிட் பேசிய வார்த்தைகள் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நாளை இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த போட்டி செஞ்சூரியனில் மதியம் 2 மணி அளவில் நடைபெறும்.

இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். குறிப்பாக விராட் கோலி படு தீவிரமாக உள்ளார்.

கோலியின் சரிவு

கோலியின் சரிவு

கடந்த சில மாதங்களாக விராட் கோலிக்கு மோசமான சூழல்கள் ஏற்பட்டுள்ளன. அவரின் டி20 கிரிக்கெட் கேப்டன்சி பறிபோன நிலையில் சமீபத்தில் 50 ஓவர் கிரிக்கெட் கேப்டன்சியும் பறிக்கப்பட்டது. இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுவும் அவருக்கு கேப்டன்சியே செய்ய தெரியவில்லை என்பது போல விமர்சனங்கள் எழுந்தன.

கோலிக்கு உள்ள கட்டாயம்

கோலிக்கு உள்ள கட்டாயம்

இதனால் வரும் முதல் டெஸ்ட் போட்டியில் அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுப்பதற்காக கோலி தயாராக உள்ளார். கேப்டன்சி மட்டுமின்றி பேட்டிங்கிலும் சதமடித்து அசத்த வேண்டிய அழுத்தம் அவரிடத்தில் உள்ளது. இந்நிலையில் விராட் கோலிக்கு ஆதரவாக ராகுல் டிராவிட் களமிறங்கியுள்ளார்.

 டிராவிட் பதில்

டிராவிட் பதில்

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவரிடம், கோலி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் வெற்றியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அதற்காக அணியில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறோம். குறிப்பாக விராட் கோலி அதற்கு முக்கிய உறுதுணையாக இருக்கிறார். அவர் ஒரு சிறந்த கேப்டன். அனைவரையும் வழிநடத்தக்கூடிய நல்ல தலைவர். டெஸ்ட் கிரிக்கெட்டை அதிகம் விரும்பக்கூடியவர்களில் கோலியும் ஒருவர்.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

இது விராட் கோலிக்கு பெரும் சவால் மட்டுமல்லாது பெரும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. ஒரு பேட்ஸ்மேனாக சாதிக்க சரியான நேரம். அயல்நாட்டு மண்ணில் எதிரணியை எதிர்பதன் மூலம் தன்னுடைய திறமையை தானே பரிசோதித்துக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும் எனக்கூறினார்.

Story first published: Saturday, December 25, 2021, 20:20 [IST]
Other articles published on Dec 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+