Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் டெஸ்ட்:இந்திய ப்ளேயிங் 11 ரெடி..கடும் அதிருப்தியில் 2 வீரர்கள்..திறமை இருந்தும் வாய்ப்பு இல்லை

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இறுதி ப்ளேயிங் 11 வெளியாகிவிட்டது. ஆனால் 2 இளம் வீரர்கள் திறமை இருந்தும் வாய்ப்பில்லை என அதிருப்தியில் உள்ளனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் தொடங்குகிறது.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு 51% மற்றும் இந்தியாவுக்கு 49% வெற்றி வாய்ப்பு உள்ளதால் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

இதற்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி ஓப்பனிங் களமிறங்குகின்றனர். சீனியர் வீரர் சட்டீஸ்வர் புஜாரா முதல் விக்கெட்டிற்கும் விராட் கோலி 2வது விக்கெட்டிற்கும் களமிறங்குகின்றனர். இவருக்கு அடுத்தபடியாக அஜிங்கியா ரகானேவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது இவருக்கு வாழ்வா? சாவா? போட்டியாகும்.

மிடில் ஆர்டர் பலம்

மிடில் ஆர்டர் பலம்

ப்ளேயிங் 11ல் ரகானே இடம்பெறுவதை நேற்று துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் உறுதி செய்தார். அதாவது ரகானே மிக முக்கிய வீரர், அவரை புறக்கணிப்பது கடினமாக இருக்கும் என மறைமுகமாக கூறியிருந்தார். இதனால் அவருக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்கப்படவுள்ளது. ரகானேவை தொடர்ந்து ரிஷப் பண்ட், மற்றும் ஆல்ரவுண்டர் அஸ்வின் களமிறங்குகிறார்.

குழப்பத்திற்கான முடிவு

குழப்பத்திற்கான முடிவு

7வது இடத்திற்கு தான் முழு நேர பேட்ஸ்மேனை நியமிப்பதா? அல்லது ஆல்ரவுண்டரை போடுவதா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் தற்போது ஷர்துல் தாக்கூர் இடம்பெற போவது இறுதியாகியுள்ளது. அவரை அணிக்குள் சேர்த்தால் ஆழமான பேட்டிங் வரிசை மற்றும் வேகப்பந்துவீச்சில் உதவுவார். ஷர்துல் தாக்கூர் இந்தாண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 65 ரன்கள் மற்றும் இங்கிலாந்து தொடரில் 2 அரைசதங்கள் என கலக்கி இருந்தார்.

Recommended Video

India Playing 11 vs SA: Race Between Ishant and Siraj | OneIndia Tamil
இளம் வீரர்கள் அதிருப்தி

இளம் வீரர்கள் அதிருப்தி

இந்நிலையில் இந்த ப்ளேயிங் 11 முடிவால், 2 இளம் வீரர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹனுமா விஹாரி தான் அது. நியூசிலாந்து தொடரில் ஸ்ரேயாஸ் சதம் மற்றும் அரைசதம் அடித்து அசத்தினார். இதே போல ஹனுமா விஹாரி கடந்த ஒருமாத காலமாக தென்னாப்பிரிக்காவில் ஏ அணியுடன் விளையாடியுள்ளார். அவரின் ஃபார்ம் அட்டகாசமாக உள்ளது. இவ்வளவு திறமை இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அதிருப்தியில் உள்ளனர்.

Story first published: Saturday, December 25, 2021, 17:15 [IST]
Other articles published on Dec 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+